லக்னோ,மார்ச்.09- உ.பி-யில் பத்திரிகையாளர் ஒருவர் நடு ரோட்டில் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் அருகே லக்னோ - தில்லி நெடுஞ்சாலையில் இந்தி நாளிதழின் உள்ளூர் பத்திரிகையாளர் ராகவேந்திரா என்பவர் நேற்று 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ராகவேந்திராவின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல் கொள்முதல் மற்றும் நில ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அதனை வெளிக்கொண்டு வந்ததால், ராகவேந்திராவுக்குக் கடந்த சில நாள்களாகவே அச்சுறுத்தல்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றும் ஏதோ அழைப்பு வந்ததின் பேரில்தான் அவர் வெளியில் சென்றார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.