states

img

முஸ்லிம் பெண்களை கடத்தி திருமணம் - உ.பி பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களை கடத்தி திருமணம் செய்துகொள்ளும்படி, அம்மாநில பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராகவேந்திர பிரதாப் சிங் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் துமாரியாகஞ்சில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் , பாஜக முன்னாள் எம்.எல்.ஏ ராகவேந்திர பிரதாப் சிங், முஸ்லிம் பெண்களை கடத்தி வந்து இந்து இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளும்படி பேசியுள்ளார். மேலும், அவ்வாறு செய்பவர்களுக்கு தானே வேலையும், பாதுகாப்பும் வழங்குவதாக அவர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், துமாரியாகஞ்சில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு இந்து பெண்கள் முஸ்லிமாக மதமாறியதாக தெரிவித்த அவர், “அதற்குப் பதிலாக பத்து முஸ்லிம் பெண்களை இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.