world

img

தீக்கதிர் உலக செய்திகள்

அமெரிக்காவின் முடக்கம் : 7,000 விமானங்கள் தாமதம்

அமெரிக்க அரசு முடங்கியுள்ள நிலையில் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஊதியம் வழங்கப்படாத காரணத்தால் விமான போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் பணியில் இல்லை. பலர் கட்டாய விடுப் பில் உள்ளனர். இதனால் விமானம் புறப்படுவது, தரையிறக்கம் உள்ளிட்ட  விமானப் பயணங்கள் தொடர்பான பணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளன. இதனால் அக்.27 அன்று மட்டும் நாடு முழுவதும் சுமார் 7,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன.

சி.ஐ.ஏ உடன் தொடர்புடைய 3 பேர் வெனிசுலாவில் கைது  

அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ உடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று நபர்களை வெனி சுலா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனை அதிகாரப்பூர்வமாக அந் நாட்டு உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ ரோண்டன் தெரி வித்துள்ளார். மேலும் அவர்கள் அமெரிக்க ராணுவக் கப்பலைத் தாக்கிவிட்டு, அப்பழியை வெனிசுலா மீது சுமத்தி அந்நாட்டை அமெரிக்கா தாக்குவதற்கான காரணத்தை ஏற்படுத்த திட்டமிடிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி தண்டனையைக் குறைக்கக் கோரிக்கை

பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி  போல்சானரோ தனக்கு விதிக்கப்பட்ட 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் மறு ஆய்வு செய்யுமாறு மேல்முறையீடு செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தேர்த லில் அவர் தோல்வியடைந்த நிலையில் புதிய அரசின் ஆட்சியில் அவர் கவிழ்க்க முயன்றார். அந்த வழக்கு மீதான விசாரணையில்  அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டு 27 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை '

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெறும் மோதல் தீவிரப் போராக மாறாமல் இருக்க அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. துருக்கியில் மூன்று நாட்களாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதற்குக் காரணம் இரு நாடுகளும் ஒன்றை ஒன்றை குற்றம்சாட்டி வருவதுதான். இரு நாடுகளின் பிரதிநிதிகளும் துருக்கியில் இருப்பதால் நான்காவது நாள் பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இதனால் போர்ப் பதட்டம் அதிகரித்துள்ளது.