அயர்லாந்து ஜனாதிபதி தேர்தலில் முற்போக்காளர் கேத்தரின் கொனோலி அபார வெற்றி!
டப்ளின், அக். 28 – அயர்லாந்தில் அக்டோபர் 24 அன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்த லில், முற்போக்கு சிந்தனையாள ரான சுயேச்சை அரசியல்வாதி கேத்த ரின் கொனோலி மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். அவர் சுமார் 64 சதவீத வாக்குகளைப் பெற்று, பழமைவாத வேட்பாளரான ஹீதர் ஹம்ப்ரீஸை விடப் பெரிய வித்தியாசத்தில் வென்றார். இவரது வெற்றியானது, ஐரோப் பிய நாடுகளில் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு அரசியலுக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதா கவும், தீவிர வலதுசாரிக் கொள்கைக ளுக்கு ஒரு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கான குரல் கேத்தரின் தனது பிரச்சாரத் தின்போது, அயர்லாந்தில் நிலவும் வீட்டு வாடகை உயர்வு போன்ற இருப்பிடப் பிரச்சனைகள், அயர் லாந்தின் ஐக்கியம் மற்றும் காசா மீதான இஸ்ரேலின் இனப்படு கொலை உள்ளிட்ட முக்கியப் பிரச்ச னைகள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பிரதான ஊட கங்கள் அவர் மீது களங்கம் கற்பிக்க முயன்றபோதிலும், அவரது வெற்றி, மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டணி தற்போது ஆளும் கூட்டணியாக உள்ள பிற்போக்குப் பழமைவாதக் கட்சிகளான ஃபியானா ஃபைல் மற்றும் ஃபைன் கேல் கட்சிகளை வீழ்த்துவதற்காக, அந்நாட்டிலுள்ள முக்கிய இடதுசாரி மற்றும் முற்போ க்குக் கட்சிகள் அனைத்தும் கேத்த ரினுக்கு ஆதரவு தெரிவித்து,ஒரே கூட்டணியாக இணைந்ததே இந்த வரலாற்று வெற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. குடியரசு மற்றும் ஜனநாயக சோசலிச அரசி யல் கட்சியான சின் ஃபின் தலைவர் மேரி லூ மெக்டொனால்டு கூறுகை யில், “இது அயர்லாந்து அரசியலில் ஒரு திருப்புமுனையாக இருக்கும். ஆளும் கட்சிகளை வீழ்த்த அனை த்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக நின்றோம்,” என்றார். பாலஸ்தீன ஆதரவும் அமைதிக் கொள்கையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக் கப்பட்டால், சர்வதேச அரங்கில் காசா இனப்படுகொலை உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று கேத்தரின் உறுதியளித்தார். “இனப் படுகொலையை சாதாரணமாகப் பார்ப்பது மனித குலத்திற்கே பேரழி வை ஏற்படுத்தும். என் மூச்சுள்ள வரை நான் பாலஸ்தீன மக்களுக்குத் துணையாக நிற்பேன்” என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அயர்லாந்து மக்கள் பாலஸ்தீனத் திற்கு ஆதரவாகப் போராடி வரும் நிலையில், கேத்தரின் கொனோலி யின் இந்த நிலைப்பாடு அவருக்குக் கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளது. மேலும், அயர்லாந்தின் வெளி யுறவுக் கொள்கையான நடுநிலை மைக்கு அவர் தொடர்ந்து ஆதரவ ளித்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றி யம் தனது அதிகாரத்தை ஆயுதம் உற்பத்தி செய்கிற பெருநிறுவனங்க ளுக்காக அல்லாமல், மக்களின் வாழ்க் கையை செழுமைப்படுத்துவதற் காகப் பயன்படுத்த வேண்டும் என் றும், நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு உத்தரவின் படி ஐரோப்பாவின் ராணு வமயமாக்கல் மற்றும்அதிகப்படி யான ஆயுதச் செலவுகளுக்கு எதிராக வும் அவர் குரலெழுப்பி வருகிறார். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பி னர்களான ஜெர்மி கோர்பின் மற்றும் சாரா சுல்தானா உள்ளிட்டவர்களும் சர்வதேச அளவிலான இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் கேத்தரின் கொனோலிக்கு வாழ்த்து தெரி வித்துள்ளனர்.
