tamilnadu

img

வாக்காளர் உரிமையைப் பறிக்கும் முயற்சியைத் தடுப்போம்! அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள பெ.சண்முகம் வலியுறுத்தல்!

வாக்காளர் உரிமையைப் பறிக்கும் முயற்சியைத் தடுப்போம்!  அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள பெ.சண்முகம் வலியுறுத்தல்!

திருப்பூர், அக். 28 - பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவை யாகச் செயல்படும் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்), வாக் காளர்களின் அடிப்படை வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சியாக உள்ளது என்றும், இதற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு எதிர்க்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியம் ஏவிபி லேஅவுட் டில், தோழர் கே.எஸ்.கே. நினைவகம் - கிளை அலுவலகக் கட்டடம் மற்றும் தோழர் எஸ். சாமிநாதன் நினைவு நூலகம் திறப்பு விழா  திங்களன்று நடைபெற்றது. இந்த கிளை அலுவலகத்தை மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திறந்து வைத்தார். தலைவர்களின் படத்தை மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துகண்ணன் திறந்து வைத்தார். நூலகத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் திறந்து வைத்தார். பொதுக்கூட்டத்திற்கு, கிளை உறுப்பினர் பி.ராக்கிமுத்து தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் எம்.பத்மநாபன் வர வேற்றார். மருத்துவர் மரகதம் சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி, செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ், வடக்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.காளியப்பன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  வாக்குரிமைப் பறிப்பு   பொதுக்கூட்டத்தில் பெ.சண்முகம் பேசுகையில், “முன்பு வாக்காளர்களை இணைக்கச் செயல்பட்ட தேர்தல் ஆணை யம், தற்போது வாக்காளர்களை நீக்குவதற் காகச் செயல்படுகிறது. பீகாரில் கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. இது பாஜகவின் அடிவருடியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதைக் காட்டுகிறது. பாஜகவிற்கு யாரெல்லாம் வாக்களிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறா ர்களோ, அவர்களின் வாக்குகளைத் திட்ட மிட்டு தேர்தல் ஆணையம் பறிக்கிறது. தற்போது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் என்ற  பெயரில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்ய உள்ளதாக தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் திருத்தத்தை முடிக்க நிர்ணயித்துள்ளார்கள். வாக்காளர் என்று நிரூபிக்க வேண்டியது மக்களின் கடமை என ஆணையம் கூறுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக இருந்த தேர்தல் ஆணையம், தற்போது ஒன்றிய அர சின் அடிமை ஆணையமாக மாறி, பாஜக வின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. வழக்கமாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்தித் தான் இதுபோன்ற பணிகளைச் செய்வது வழக்கம். தற்போது அப்படி அல்ல. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விசிக, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ் நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் திருத்தம் செய்யக் கூடாது என முடிவெடுத்துள்ளன. இந்திய வாக்காளர்களின் சட்டப்பூர்வமான உரிமை யைப் பாதுகாக்க, அனைத்துக் கட்சிகளும் இணைந்து இதை நிறுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார். மேலும், பீகாரில் இஸ்லாமியர்கள், பழங்குடியினர், பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டவர் என பாஜக விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என எண்ணு பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதுதான் அங்கே நடந்த அனுபவம் எனவும் கூறினார்.  தீவிர வறுமையை ஒழித்த கேரள இடதுசாரி மாதிரிக்கு வாழ்த்து  நவம்பர் 1ஆம் தேதி, இந்தியாவில் முதன்முறையாகக் கேரளாவை ஆளும் இடதுசாரி அரசு, கேரளாவை ‘தீவிர வறுமை ஒழிப்பு மாநிலம்’ என அறிவிக்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் சொந்த வீடு இல்லாதவர்கள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெறாத வர்கள் என அனைவரையும் வறுமையின் பிடி யிலிருந்து விடுவித்து, கேரளாவில் சொந்த வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது.  சட்டப்படி கேரளாவுக்குத் தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு பாரபட்ச மாக மறுக்கும் சூழலிலும் இச்சாதனை யை நிகழ்த்திய கேரள அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநிலக் குழு சார்பில் அவர் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தனியார் பல்கலை. சட்டத்திருத்தம் திரும்பப் பெற்ற அரசுக்கு வரவேற்பு உயர்கல்வியைத் தனியார்மயமாக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனியார் பல்கலைக் கழகங்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். இந்திய மாணவர் சங்கம், பேராசிரியர்கள், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குப் பின், இச்சட்டம் திரும்பப் பெறப்படும் என  உயர்கல்வி அமைச்சர் அறிவித்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக  பெ.சண்முகம் தெரிவித்தார்.  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தல்  முன்கூட்டிய பருவமழை காரணமாக டெல்டா பகுதியில் குறுவை (5.45 லட்சம் ஏக்கர்) மற்றும் சம்பா (16 லட்சம் ஏக்கர்) சாகுபடிகள் கடுமையாகப் பாதிக்கப்  பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்த நெல்கூட மழையில் நனைந்து வீணாகி உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் உணவு கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ள 17% ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு  முயற்சி செய்ய வேண்டும். மழை நின்ற பிறகு ஆய்வு மேற்கொள்ள வந்த ஒன்றிய அரசு  அலுவலர்களிடம் இருந்து போதுமான நிதியை மாநில அரசு பெற்று, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.  மழை நீரைச் சேமிக்கத் தடுப்பணைகள் கட்டக் கோரிக்கை  அபரிமிதமாகப் பெய்யும் மழை நீரைச் சேமிக்க, இராமநாதபுரம், சிவகங்கை, திரு வண்ணாமலை, தர்மபுரி போன்ற வானம் பார்த்த பூமியை நம்பி உள்ள விவசாயி களுக்குச் சாதகமாக குளம், குட்டைகள் தூர்வாருதல் மற்றும் தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற் கொள்ள வேண்டும் என்றும் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொண்டார்.