states

img

வழக்கறிஞர் பணி முதல் நீதிபதி வரை உச்சநீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்

வழக்கறிஞர் பணி முதல் நீதிபதி வரை  உச்சநீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்

உச்சநீதிமன்றத்தின் 52ஆவது தலைமை  நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் (பி.ஆர்.கவாய்) 14 மே  2025 அன்று பதவியேற்றார். இவரது பதவிக்காலம் நவம்பர் 23ஆம் தேதி நிறைவு பெற உள்ளது. இத்தகைய சூழலில், அடுத்த தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது.  விதிகளின்படி, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதிக்குப் பிறகு உள்ள  மூத்த நீதிபதி தலைமை நீதிபதியாக பதவியேற்பார். இதற்காக அப்போதைய தலைமை நீதிபதியிடம் இருந்து பரிந்துரை பெறப்படும். அந்த வகையில்,  தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் அவர்களிடம் பரிந்துரைகோரப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தனக்குப் பிறகு உள்ள மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யகாந்த்  அடுத்த தலைமை நீதிபதியாக இருப்பார் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார். நவம்பர் 24ஆம் தேதி தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவி ஏற்றால் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.  நீதிபதி சூர்யகாந்த் ஹரியானாவின் ஹிசாரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீதிபதி சூர்யகாந்த் 1981இல் ஹிசாரில் உள்ள அரசு முதுகலை கல்லூரியில் பட்டமும், 1984இல் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார்.  நீதிபதியாவதற்கு முன்பு, மூத்த வழக்கறிஞராக செயல்பட்டார். மேலும் ஹரியானாவின் அட்வகேட் ஜெனரல், ராஞ்சியில் உள்ள தேசிய சட்ட ஆய்வு கள் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் பார்வை யாளர் மற்றும் தேசிய சட்ட சேவைகள் ஆணை யத்தின் அலுவல் நிர்வாகத் தலைவராகவும் பணி யாற்றியுள்ளார். தொடர்ந்து உயர்நீதிமன்றங்களின் நீதிபதியாகவும், இமாச்சலப்பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி னார். 2019 மே 25ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி யாக பதவியேற்ற சூர்யகாந்த், 24 நவம்பர் 2025 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.