states

img

தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்!

தெலுங்கானா,நவம்பர்.04- தெலுங்கானாவில் இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், முலுகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது.
சில இடங்களில் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திலும் ஒருசில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.