districts

img

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச.4- மின்வாரியத்தை பாது காக்க வலியுறுத்தி தமிழ் நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பினர் (சிஐடியு) ஈரோடு மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மின்வாரியத்தை பொதுத்துறை நிறுவனமாக  தொடர்ந்து பாதுகாக்க  வேண்டும். 2023 டிசம்பர் முதல் வழங்க  வேண்டிய ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியுவினர் ஈரோடு மேற் பார்வை பொறியாளர் அலுவலகம் முன்  செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்திற்கு ஈரோடு மின் பகிர் மான வட்டகிளைத் தலைவர் எம்.ஆர். பெரியசாமி தலைமை வகித்தார். மண்ட லச் செயலாளர் சி.ஜோதிமணி, திட்டச் செய லாளர் பி.ஸ்ரீதேவி, மாநில செயற்குழு உறுப் பினர் சி.சக்திவேல் ஆகியோர் உரை யாற்றினர். முடிவில், பொருளாளர் ஏ.விஸ்வ நாதன் நன்றி கூறினார். இதேபோல, கோபி மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளைத் தலைவர் பி.சேகர் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் கே. பாண்டியன் சிறப்புரையாற்றினார். கோட்டச்  செயலாளர் ஜி.நிவாஸ் நன்றி கூறினார்.