பஞ்சாப்,நவம்பர்.04- பஞ்சாப் முன்னாள் முதல்வர் மீது கொலை முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வாசலில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் மற்றும் சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலை திடீரென ஒருவர் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார் அதற்குள் அங்குள்ள ஒருவர் அவரை மடக்கிப் பிடித்ததால் குண்டு வேறு ஒரு இடத்தில் பாய்ந்ததால் சுக்பீர் சிங் பாதல் உயிர்த்தப்பினார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் பஞ்சாப் காவல்துறை உடனடியாக கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.