districts

img

நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு

நாமக்கல், டிச. 4- பெஞ்சல் புயல் காரணமாக கன மழை யால் பாதிக்கப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி  மக்களுக்கு உதவும் வகையில், பள்ளிபாளை யம் நகராட்சி சார்பில் நிவாரணப் பொருட்கள்  அனுப்பிவைக்கப்பட்டது.  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்க ளுக்கு உதவும் பொருட்டு நிவாரணப் பொருட் களை சேகரிக்கும் பணியினை பள்ளிபாளை யம் நகராட்சி மேற்கொண்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக சுமார் ரூ.5 லட்சம்  மதிப்பில்  நிவாரணப் பொருட்களை அனுப்பி  வைக்கும் நிகழ்வு புதனன்று ஆவரங்காடு நக ராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. நகர மன்றத் தலைவர், மோ.செல்வராஜ்,  நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன் நகராட்சி  ஆணையாளர் வி.தயாளன் ஆகியோர் நிவா ரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை  அனுப்பி வைத்தனர். மேலும் நகராட்சி சார் பாக நிவாரணப் பொருட்கள் வழங்கிய  தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற் றும் தன்னார்வலர்களுக்கு நகராட்சி சார் பாக நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.  மேலும் திமுக வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி  அதிகாரிகள், ஆகியோர் உடனிருந்தனர்.