அரியலூர், பிப்.5- திருச்சி மணப்பாறை சிப்காட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சாரண சாரணிய வைரவிழாவை கடந்த ஜன 28 முதல் பிப் 3 வரை தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலிருந்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரண சாரணியர் கலந்துகொண்டனர். இந்தியாவின் பல்வேறு மாநிலத்தின் சிறப்பம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அரியலூர் மாவட்டத்தின் சார்பாக யுனெஸ்கோ நிறுவனத்தால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட உலக பிரசித்திபெற்ற கங்கைகொண்ட சோழபுரம் கோவில் சிற்ப வடிவில் வானவநல்லூர் நடுநிலைப்பள்ளி சார்பில் காட்சிப்படுத்தப்பட்டது. இலங்கை, நேபாளம், மலேசியா போன்ற பல்வேறு நாட்டினர் வந்திருந்து கோவில் சிற்பத்தை கண்டு வியந்து பாராட்டினர். இதனையறிந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, வானவநல்லூர் தலைமை ஆசிரியர் அமுதாவுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தம், மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டாரக்கல்வி அலுவலர் இராசாத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.