கோவை, பிப்.5- ரூ.15 கோடி மதிப்பில் நல்லறம் கட்டிய பேரூர் தர்பண மண்டபம் அரசு நிர்வாகத்தி டம் ஒப்படைக்கப்பட்டது. கோவையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நல்லறம் அறக் கட்டளையின் தலைவராக முன்னாள் அமைச் சர் எஸ்.பி வேலுமணியின் சகோதரர், எஸ்.பி அன்பரசன் செயல்பட்டு வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி வேலுமணி இருந்த போது, இந்து அறநிலையத்துறை, பேரூர் பட்டீஸ்வரர் கோயில், நொய்யல் ஆற்றங் கரையில் இருந்த 5.5 ஏக்கர் நிலம் தர்ப்பணம் மண்டபம் கட்ட நல்லறம் அறக்கட்டளையி டம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், விரைந்து முடிக்க இந்து சமய அற நிலைத்துறை கொடுத்த அழுத்தம் காரண மாக பணிகள் முடிவுற்று இந்து சமய அறநி லையத்துறை துணை ஆணையர் ரமேஷ் மற்றும் உதவி ஆணையர் விமலா ஆகியோரி டம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி வேலுமணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி அறநிலை துறைக்கு சொந்தமான நிலத்தை நல்லறம் அறக்கட்டளைக்கு கொடுத்தார். இதன் மூலம் அந்த நிலத்தை முழுமையாக ஆக்கிர மிப்பு செய்ய முயற்சிகள் நடைபெற்றுள் ளது. எனவே பணிகள் இழுத்தடிக்கப்பட்டு வந்தது. நான் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டேன். இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது தர்ப்பணம் மண்டபம் மீண்டும் அரசு கைக்கு கிடைத்துள்ளது, என்றார்.