சேலம், பிப்.5- தனியார் மய நடவடிக்கையை கண் டித்து, சிஐடியு உருக்காலை தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் உருக்காலை 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. செயில் நிர்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரந்தரப் பணியாளர்களை பணியமர்த்தா மல், ஒப்பந்த முறையை அதிகரித்து வருகி றது. இதைத்தொடர்ந்து நிர்வாக இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளடக்கிய புதிய ஒப் பந்த முறையை செயல்படுத்த மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இது மறைமுகமான தனியார் மய நடவடிக்கையா கும். இத்தகைய பாதகமான செயல்முறை களை நிர்வாகம் உடனடியாக கைவிட வேண் டும், என வலியுறுத்தி சிஐடியு உருக்காலை தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.பி.சுரேஷ்குமார், சிஐ டியு மாவட்ட நிர்வாகி பி.பன்னீர்செல்வம் உட் பட பலர் கலந்து கொண்டனர்.