திருப்பூர், பிப்.5 - ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையத்தில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு சாதகமான திட்டங்கள் எதுவும் இல்லை. மக்கள் விரோத பட்ஜெட்டாக உள்ளது என குற்றம் சாட்டி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செய லாளர் அருண்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கிளைச் செயலாளர் விஸ்வநாதன், மாநில அமைப்பு செயலா ளர் முகமது ஜாபர், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் ஏ.ரமேஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.