திருப்பூர், பிப்.5- கௌரவ விரிவுரையாளர்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர். இவர்க ளுக்கு ஆதரவாக சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த மாத ஊதியம் ரூ.57 ஆயிரத்து 700 ஐ வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் உதவிப் பேராசிரியர் பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து திருப் பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவு ரையாளர்கள் செவ்வாயன்று முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இரண்டாம் நாளான புதனன்று கௌரவ விரிவு ரையாளர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட னர். இவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தினர் சிக்கண்ணா அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கல்லூரி கிளைச் தலைவர் விமல்ராஜ் தலைமை வகித்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி, மாவட்ட துணைச் செயலாளர் மணி கண்டன், மாவட்ட நிர்வாகிகள் நிஷா, சுஜிதா, சபரி உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.