திருப்பூர், பிப். 5 - திருப்பூர் மாநகராட்சி 18ஆவது வார்டு கட்டபொம்மன் நகரில் இருந்து 6ஆவது வார்டு கவுண்டநா யக்கன்பாளையம் வரை செல்லும் பிரதான சாலை பொது மக்கள் நடந்து செல்வதற்கும், வாகனப் போக்குவரத்துக்கும் லாயக்கில் லாமல் படுமோசமாகக் காட்சிய ளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை சீர்கு லைந்து வழியெங்கும் குண்டும், குழியுமாக உள்ளது. அத்துடன் பாப்பநாயக்கன்பாளையம் சாலை யில் சாக்கடைக் கழிவுநீரும், பாதா ளச் சாக்கடை மலக்கழிவுநீரும் வெளியேறி சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. படுமோச மான, துர்நாற்றம் வீசும் இச்சாலை யில்தான் தினமும் அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் சென்று வருகின்றனர். குறிப்பாக, கட்டபொம்மன் நக ரில் என்.ஆர்.கே.புரம் தொலை பேசி நிலையம் அருகில் இருந்து பாப்பநாயக்கன்பாளையம், பவா னிநகர், கவுண்டநாயக்கன்பா ளையம் வரை செல்லும் இந்த சாலை சுமார் 40 ஆண்டு காலமாக தீராத பிரச்சனையாக மோசமான நிலையிலேயே உள்ளது. ஏற்றத்தாழ்வான நில அமைப் பின் காரணமாக இப்பகுதியில் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வா யிலும் சாக்கடை நீர் வெளியேறிச் செல்ல வழியின்றி, ஆண்டுக்கணக் கில் தேங்கியிருக்கிறது. குப்பை கூளங்களும், பிளாஸ்டிக் கழிவு களும் அடைத்துக் கொண்டிருக்கி றது. சாக்கடை கால்வாய் அடைத்தி ருக்கும் நிலையில் பாதாளச் சாக்கடை மேன்ஹோல் மூடி திறந்த நிலையில், கழிவுநீர் பக்கத்தில் இருக்கும் தனியார் நிலத்திலும் குளம் போல் தேங்கியிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது குடிநீர்த் திட்டக் குழா யும், அதன்பிறகு பாதாளச் சாக் கடை அமைப்பதற்கும் பணிகள் தொடங்கியதில் இருந்து இப்போது வரை பிரச்சனை முழுமையாகத் தீராமல் தொடர்கிறது. மாநகராட்சி பொறியியல் துறை இப்பகுதியை ஆய்வு செய்து கழிவுநீரை வெளியேற்றுவதற்கு உரிய தொழில்நுட்பத்துடன் தொலை நோக்கு அடிப்படையில் திட்டமிடா ததால் பல்லாண்டுகளாக இந்நிலை நீடிக்கிறது. இதன் காரணமாகவே இங்குள்ள சாலையும் சிதிலம டைந்துள்ளது. திருப்பூர் நகரின் வடகிழக்கில் பாப்பநாயக்கன்பாளையம், கவுண் டநாயக்கன்பாளையம் உள்ள டங்கிய இந்த வட்டாரத்தில் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. சுற்று வட்டாரத்தில் பல நூறு குழந்தைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடங்களும் உள்ளன. கடந்த 70 ஆண்டுகளாகச் செயல் பட்டு வரும் பாப்பநாயக்கன்பாளை யம் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வீதியும் சீர்குலைந்து உள்ளது. சாக்கடை கால்வாய் உடைந்து, குறு கலான இந்த பாதையில்தான் ஆபத் தான நிலையில் குழந்தைகள் வந்து செல்கின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் வடக்கு மாநகரக்குழு உறுப்பினர் பாப்பநாயக்கன்பா ளையம் என்.மனோகரன் கூறு கையில், ஆண்டுக்கணக்கில் இங் குள்ள மக்கள் துயரமான நிலையை அனுபவித்து வருகின்றனர். திருப் பூர் நகராட்சியாக இருந்த காலத் தில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்ந்திருப்பது வரை நாங்களும் தொடர்ந்து இப்பிரச்சனைக்குத் தீர்வு காண நிர்வாகத்தைக் கோரி வருகிறோம். உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி நிர் வாகத்தினர் கூறுகின்றனர். எனி னும் இதுவரை பிரச்சனை தீர வில்லை. இதை யாரும் தீர்க்க மாட் டார்களா என்று மக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர்.”, என்று கூறினார். திருப்பூர் மாநகராட்சி இரண்டா வது மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜிடம் கேட்டபோது, ஏறத்தாழ 40 ஆண்டுகளாக உள்ள இப்பிரச்சனையை கடந்த காலங்க ளில் முறையாகத் தீர்வு காணாத தால் இந்த நிலை நீடிக்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண நடவ டிக்கை எடுத்து வருகிறோம். 3 மீட்டர் ஆழம், 3 மீட்டர் அகலம் என்ற அள வில் கழிவுநீர் வெளியேறிச் செல்ல முழுமையான வடிகால் வசதி மற் றும் சாலை அமைப்பதற்கு விரி வான திட்ட அறிக்கை ரூ.13 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத் துறையில் நிதி மற்றும் நிர்வாக அனுமதி பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம். அனுமதி கிடைத்தவுடன் மார்ச், ஏப்ரல் மாதத்தில் பணிகள் தொடங்கப்ப டும் என்று கூறினார்.