districts

img

தொடர் வெற்றிப் பயணத்தின் 40 ஆண்டுகள்: புகளூர் காகித ஆலையில் கொண்டாட்டம்

கரூர், பிப்.5-  கரும்பு சக்கையில் இருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழக அரசுக்குச் சொந்தமான புகளூர் காகித ஆலை 1983 இல் துவக்கப்பட்டது. மேலும், 1985 ஆம் ஆண்டு எழுதுகின்ற காகிதம் மற்றும் செய்தித்தாள் உற்பத்தியை வெற்றிகரமாக துவக்கியது.  அருகிலேயே காகிதஆலை கழிவிலிருந்து சிமெண்ட் உற்பத்தி ஆலை ஒன்றும் துவக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மொண்டிப்பட்டியில் அட்டை தயாரிக்கும் ஆலை ஒன்றும் துவக்கப்பட்டு வெற்றிகரமாக உற்பத்தி நடந்து வருகிறது. காகித ஆலையில் முதன் முதலாகதுவக்கப்பட்ட டிஎன்பிஎல் தொழிலாளர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு, புகளூர் மற்றும் மொண்டிப்பட்டி (மணப்பாறை) ஆலை வாயில் முன்பாக இனிப்பு வழங்கி, பட்டாசுகள் வெடித்து சங்க உறுப்பினர்கள் கொண்டாடினர்.  ஆலை வாயில் முன்பாக நடைபெற்ற வாயிற் கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜி.ஜீவானந்தம், இந்த ஆலையை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்துக் கொண்டே, ஊழியர்கள் உரிமைகளை பெறுவதில் என்றென்றும் உறுதுணையாக சங்கம் செயல்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.