மின்சாரம் தாக்கி முதியவர் பலி
சேலம், டிச.4- சேலம் புத்தகத் திருவிழா வளாகத்தில் மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநக ராட்சி திடலில் சேலம் புத்தகத் திருவிழா நடைபெற்று வரு கிறது. 200க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் செயல்படும் புத்த கத் திருவிழா காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. சமூக ஆர்வலர்கள் பள்ளி மாணவ மாணவி கள் கல்லூரி மாணவ மாணவிகள் புத்தகத் திருவிழாவில் பங்கெடுத்தும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வரு கின்றனர். புத்தகத் திருவிழாவில் மின்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்த திருப்பத்தூர் மாவட்டம் ஏரி கொடி பகுதியை சேர்ந்த 56 வயது உடைய கலிம் என்பவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் புத்தகத் திருவிழாவிற்கு வந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறை விசாரணையில், இரவு மழை பெய்த நிலையில் கண்காட்சியில் திடீர் மின்தடை ஏற் பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் கலீம் ஈடுபட்ட நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை சக தொழிலாளர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சையில் சேர்ந்த சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பள்ளப் பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டா கேட்டு இலங்கை தமிழர்கள் மனு
சேலம், டிச. 4- சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சாஸ்திரி நகரை சேர்ந்த இலங்கை தமிழர்கள் பட்டா கோரிக்கைக்காக மனு அளித்த னர். இலங்கை தமிழர்களாகிய இவர்கள், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். லால் பகதூர் சாஸ்திரி மூலம் தாயகம் திரும்பிய தங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. அப் போதைய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வழங்கப்பட்ட நில பத்திரத்தை ஒப்படைக்க கூறியுள்ளார். அதன் பெயரில் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் தங்களின் ஒரிஜினல் பத் திரத்தை கொடுத்துள்ளனர். தற்போது வரை அந்த பத்திரத்தை திருப்பி அரசு வழங்க வில்லை. இதனால் கடன் தொகை வீட்டு அடமானம் போன்ற வற்றிற்கும், வீடு வாங்க விற்க எந்த அரசு அலுவலக பணி களும் நடைபெறாமல் உள்ளது. தங்களுக்கு தங்களின் ஒரிஜி னல் பாத்திரத்தை வழங்க வேண்டும். உண்மையான பத்திரப்பதிவு செய்வதற்கு தமிழக முதல் வரிடம் மனு அளித்ததன் பேரில் வீட்டுமனை பத்திரம் கட வுச்சீட்டு குடும்ப அட்டை தர தமிழக அரசு 19962.ம.வ. 2010.76 ஆணையிட்டுள்ளது. இருப்பினும் இதுவரை அரசு அதிகாரி கள் தங்களுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. உடனடியாக தங்களுக்கு பட்டா மற்றும் அடை யாள அட்டை வழங்க வேண்டும் என அம்மனுவில் தெரி வித்துள்ளனர்.
மழைநீர் வடியாதால் போக்குவரத்து துண்டிப்பு
சேலம், டிச. 4- சேலம் கந்தம்பட்டி ரயில்வே சுரங் கப்பாதையில் தேங்கிய மழைநீர் முழு வதும் வடியாததால் இரண்டாவது நாளாக புதன்றும் போக்குவரத்து துண் டிக்கப்பட்டது. இதன்காரணமாக 10 கிலோ மீட்டர் தூரம் வாகன ஓட்டிகள் சுற் றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள் ளது. சேலத்தில் திங்களன்று பெய்த கன மழையின் காரணமாக சேலம் மாநக ராட்சிக்கு உட்பட்ட சேலதாம்பட்டி ஏரி நிரம்பி வெளியேறிய நீர் அருகே உள்ள கந்தம்பட்டி சுரங்கப்பாதை முழுவதும் செவ்வாயன்று மூழ்கியது. இதனால். சேலம் சிவதாபுரம், இளம்பிள்ளை, எடப்பாடி செல்லக்கூடிய பிரதான சாலை போக்குவரத்து முடங்கியது. இந்த நிலையில் மாநகராட்சி பணியா ளர்கள் மழை நீரை வடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலும், சுரங்கத்தில் இரண்டு அடி அளவிற்கு மழைநீர் இன் னும் முழுவதும் வடியாமல், சேறும் சகதி யாக இருப்பதால், இரண்டாவது நாளான இன்றும் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் சுரங்க பாதையை கடக்காதவாறு காவல்துறையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். சுரங்கத்தில் மழை நீர் முழுவதும் வடிந்த பிறகு பொது போக்குவரத் திற்கு அனுமதிக்கப்படும் என அதிகாரி கள் தெரிவித்தனர்.
அக்னிபாத் வீரர்கள் அணி வகுப்பு
அக்னிபாத் வீரர்கள் அணி வகுப்பு உதகை, டிச.4- குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் 516 அக்னி பாத் வீரர்களின் அணி வகுப்பு புதனன்று நடைபெற் றது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ முகா மில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மற்றும் மகாராஷ் டிரா மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகி றது. பயிற்சி பெறும் வீரர்கள், நாட்டின் பல இடங்க ளுக்கும் பணி புரிய அனுப்பப்படுகின்றனர். இம்முகாமில், 6 மாதங்கள் பயிற்சி பெற்ற, 516 பேர், அக்னி பாத் திட்டத்தில் அக்னி வீரர்களாக பணிபுரிய சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி புதனன்று வெலிங்டன் பேரக்ஸில் நடைபெற்றது. பக வத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, அக்னி பாத் வீரர்கள், சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர். வீரர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரி யாதையை ராணுவ பயிற்சி மையத்தின் கமாண்டன்ட் கிறிஸ் தேதாஸ் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து இப்பயிற்சியில் சிறந்து விளங்கிய 11 அக்னி பாத் வீரர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
மூவர் கொலையுண்ட குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரில் ஆறுதல்
திருப்பூர், டிச. 4 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் சேமலைக்க வுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இழப்பைச் சந்தித் துள்ள அந்தக் குடும்பத்தாரை மார்க்சிஸ்ட் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், பொங்கலூர் ஒன்றி யம் சேமலைகவுண்டன்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் அலமேலு அம்மாள், தந்தை தெய்வசிகாமணி, இவர்களது மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் கடந்த 28ஆம் தேதி நள்ளிரவு படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்த வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்ப டுத்தியுள்ளது. கொலை நடைபெற்று சுமார் ஒரு வார காலம் ஆன நிலை யிலும் காவல் துறையினர் குற்றவாளிகளை கண்டறிய முடியா மல் திணறி வருகின்றனர். 14 தனிப்படைகளை அமைத்து துப்புத் துலக்கி வருகின்றனர். இந்நிலையில் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் கொலையுண்டவர்களின் வீட்டுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைவர்கள் புதன்கிழமை நேரில் சென்று அந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரம ணியன், எஸ்.பவித்ராதேவி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. சம்பத், பல்லடம் ஒன்றியச் செயலாளர் வை.பழனிச்சாமி, பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், ஒன்றியக் குழு உறுப்பினர் சிவசாமி உள்ளிட்டோர் அவரது குடும்பத்தா ரைச் சந்தித்துப் பேசினர்.
ரூ.33.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
ரூ.33.48 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் அவிநாசி, டிச.4- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 151 விவசாயிகள் கலந்து கொண்டு 1,193 மூட் டைகள் நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்த னர். திருப்பூர் மற்றும் ஈரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் கலந்து கொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,010 முதல் ரூ.7,316 வரை யிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,416 முதல் ரூ.6,926 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.5,826 முதல் ரூ.6,400 ஏலம் போனது. மொத்தம் ரூ.33.48 இலட்சத்திற்கு ஏலம் நடை பெற்றது.
திருப்பூர் ரயில் நிலையத்தை விரிவுபடுத்த ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் எம்பி., கோரிக்கை
திருப்பூர், டிச.4- திருப்பூர் ரயில் நிலையத்தை விரிவுப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், ஒன்றிய ரயில்வே துறை அமைச் சர் அஸ்வினி வைஷ்ணவிடம் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப் பூர் ரயில் நிலையத்தை விரிவுபடுத்தி மேம்ப டுத்த வேண்டும். தற்போதுள்ள சரக்கு நிலை யம் சரக்குகளை கையாள முடியாத அள வுக்கு சிறியதாக உள்ளது. அதை உடனடி யாக விரிவாக்கம் செய்ய வேண்டும், திருப் பூர் ரயில் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வஞ்சிபாளை யத்தில் இருந்து கூடுதல் சரக்கு நிலையம் கட்டி இயக்க வேண்டும். திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூலிபாளையம், ஊத் துக்குளியை சந்திப்பாக மாற்ற வேண்டும். ஊத்துக்குளி சாலையை இணைக்கும் முத்து நகர், கிருஷ்ணசாமி கவுண்டர் லே அவுட், கொங்குநகர், புது ராமகிருஷ்ணாபுரம் ஆகிய சாலைகளை இணைக்கும் ஜங்ஷனில் தண் ணீர் தேங்கி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த கடு மையான இடையூறுகளால் மக்களுக்கு மிக வும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. குறுகிய மற்றும் மிகவும் பழமையான பாலத்தின் கீழ் ஒரே ஒரு இரு வழி மட்டுமே உள்ளது. ஏற்க னவே வைத்த கோரிக்கையை ஏற்று, இரண்டு கீழ் பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப் பட்டு, திடீரென நிறுத்தப்பட்டுள்ளது தற் போது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனடியாக தலையிட்டு முழுமைய டையாத கீழடி பாலங்களை முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உடுமலையில் புத்தகக் கண்காட்சி
உடுமலை, டிச.4- உடுமலைப்பேட்டை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இரண்டு நாள் புத்தகக் கண்காட்சி செவ்வாய் மற்றும் புதனன்று நடைபெற்றது. உடுமலையில் நடைபெற்ற இரண்டு நாள் புத்தகக் கண்காட் சியில் பத்து வெவ்வேறு நிறுவனத்தை சேர்ந்த புத்தக வெளி யீட்டாளர்கள் கலந்து கொண்டு அவர்களுடைய கால்நடை மற்றும் பொது அறிவியல், இலக்கியம், காவியங்கள், வர லாற்றுக் கதைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைத் தொகுப்புகள், சுயசரிதை சார்ந்த 5000 புத்தகங்களை பார் வைக்கு வைத்தனர். இதை 200 மாணவ, மாணவிகள் மற்றும் 50 பேராசிரியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். இவ்விழாவில், கல்லூரி முதல்வர் பா.குமரவேல் துவக்கி வைத்து, புத்தக வாசிப்புக்கான முக்கியத்துவத்தையும் வாழ்க்கையில் வெற்றி பெற நூலகத்தை பயன்படுத் தும் விதத்தை பற்றியும் எடுத்துரைத்தார். முன்னதாக உடும லைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நூலக அதிகாரி சி.கதிர்வேலன் வரவேற்று பேசினார். முடிவில், சு.பிரீத்தி நன்றி கூறினார்.
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு கோவை, டிச.4- மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில், கிளைச் செய லாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மேற்கு நக ரக்குழு மற்றும் பொள்ளாச்சி தாலுகா குழுவிற்குட்பட்ட கிளை களில் நடைபெற்ற கிளை மாநாடுகளில் கிளைச்செயலா ளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி கோவை மேற்கு நகரக்குழுவிற்குட்பட்ட 71 ஆவது வட்ட கிளைச் செயலாளராக எம்.ரங்கராஜ், 70 ஆவது வட்டம் - கே.குமாரசாமி, 78 ஆவது வட்டம் - கே.ஜம்பு, 79 ஆவது வட்டம் - வெள்ளிங்கிரி, எல்.ஐ.சி. கிளை – கிருஷ்ணமாச்சாரி, 80 ஆவது வட்டம்.45 - எஸ். சிவக்குமார், 80 ஆவது வட்டம்.46 - ஆர்.செல்வம், 84 வட்டம் - ராஜாகனி, 84 வட்டம் - எஸ். ஷாஜ கான், அரிசி பிரிவு - சர்புதீன், ஆட்டோ சங்க கிளை - கே. பழனி யப்பன், தங்க நகை 1 ஆவது கிளை - எஸ். சம்பத்குமார், தங்க நகை 2 ஆவது கிளை - என்.எம்.கண்ணன், டாஸ்மாக் 1 ஆவது கிளை - சரவணன், டாஸ்மாக் 2 ஆவது கிளை - டி. இராமகிருஷ்ணன், என்.டி.சி. கிளை – தண்டபாணி, டாஸ்மாக் சுமைப்பணி.1 - எம்.எச்.ஜஹாங்கீர், டாஸ்மாக் சுமைப்பணி.2 - எம்.எஸ்.பீர் முகமது, டாஸ்மாக் சுமைப்பணி.3 - ஆர். காஜா உசேன், ஆர்.எஸ்.புரம் டேக்சி கிளை - கே.கோபிநாத், ராஜ வீதி வேன் கிளை - எம்.ஆறுமுகம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். பொள்ளாச்சி தாலுகா பொள்ளாச்சி நகரக் கிளை - ஸ்டாலின் பழனிச்சாமி, ஆச்சிப் பட்டி - எஸ். மாதேஸ்வரன், கோமங்கலம் - பி.செல்வகுமார், சிங்காநல்லூர் - கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி, சின்னம்பாளையம் - ஜேசுமாணிக்கம், ஊத்துக்குளி - சத்யநாதன், நல்லாத்துக் குளி - மணிகுமார், புளியம்பட்டி - அப்பாவு, கிணத்துக்கடவு - மருதாச்சலம், சுரேஸ்வரன்பட்டி - மனோகரன், சமத்துவபுரம் - கிருஷ்ணமூர்த்தி, சேரிபாளையம் - சுப்பிரமணி, அரசம்பாளை யம் – ரேவதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று மாவட்டக் குழு அலுவலக கிளைச் செயலாள ராக கே. ஆனந்தன், மாவட்டக் குழு மையக்கிளை செயலாள ராக என்.ஜெயபால் ஆகியோர் தேர்வு செய்யப்ப்ட்டனர்.
பாலியல் வன்கொலை - 2 பேர் கைது
சேலம், டிச. 4- நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த பெண்ணை, சேலத்தை சேர்ந்த இருவர் கூட்டு பாலியல் வன்கொலையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த பெண், கடந்த 25ஆம் தேதி சிகிச்சைக்காக சேலம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரின் உறவி னர்கள் அளித்த புகாரின் பேரில் சேலம் டவுன் காவலர்கள் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டு அவரின் உடல் ஏற்காடு அடிவாரத்தில் வீசப்பட் டது தெரியவந்தது. அவரின் உடல் பரிசோதனையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது உறுதியானது. இந்த கொலை தொடர்பாக கன்னங்குறிச்சி தாமரை நகரைச் சேர்ந்த ரவுடி கனகராஜ், அவரின் கூட்டாளி சக்திவேல் ஆகி யோரை டவுன் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கனகராஜ் சரக்கு ஆட்டோவில் சென்று பூண்டு வியாபாரம் செய்தபோது, சம் பந்தப்பட்ட பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் தேதி, கனகராஜ் அப்பெண்ணை ஏற்காடு அடிவாரத் துக்கு அழைத்துச் சென்று தனது நண்பருடன் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்தி ருப்பது விசாரணையில் தெரியவந்தது.