திருப்பூர், டிச.4- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலைய வளாகங்களிலும் மாணவர் ஜனநாயகப் பேரவை தேர்தல் நடத்தக் கோரி இந்திய மாண வர் சங்கத்தினர் புதனன்று திருப்பூரில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முன்பு இந்திய மாண வர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழு சார் பில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக் கத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் சுஜிதா தலைமை வகித்தார். குமார் நகர் மேல்நிலைப் பள்ளியில் மாநில செயற்குழு உறுப்பினர் ஷாலினி தலைமை வகித்தார். இந்த கையெ ழுத்து இயக்கங்களில் பள்ளி, கல்லூரி மாண வர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இந்நிகழ்விகளில், மாவட்ட துணைச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகி கள் அனு சுபாஷினி, பொன்னம்மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.