districts

img

வெள்ளத்தில் பாலம் அடித்து சென்ற நிலையில் கயிற்றின் உதவியோடு பாலத்தை கடக்கும் மக்கள்

தருமபுரி, டிச. 4- தருமபுரி தொப்பையாறு அணை தண்ணீரால் பாலம் அடித்து  செல்லப்பட்டது. இதனையடுத்து ஆபத்தான முறையில் கயிற்றை  கட்டி பொதுமக்கள் நீர்வழிப் பாதையை கடந்து செல்கின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம், கம்மம்பட்டி  ஊராட்சிக்குட்பட்ட தொப்பை யாறு ஆற்றங்கரையோரம் விநாய கபுரம், காட்டுவலவு, கஸ்தூரி கோம்பை மற்றும் பாப்பம்பட்டி ஆகிய பகுதிகளில், 10 -க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளன.   இக்கிராமங்களில், 2 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர்.  இதனால் தொப்பையாறு  அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், 2,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண் ணீரானது தொப்பையாறு ஆற் றில் ஆர்ப்பரித்து கொண்டு, மேட்டூர்  அணைக்கு செல்கிறது. டிச.2 அன்று இரவு ஆற்றில் அதி களவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட தால், ஆற்றின் குறுக்கே விநாயக புரம் பகுதிக்கு அமைக்கபட்ட தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றது. அதேபோல், வெள்ள நீரிலிருந்து கஸ்தூரி கோம்பைக்கு செல்லும் வழியில்,  தரைப் பாலத்தை தாண்டி அபாயகர மான நிலையில் தண்ணீர் சென்று  கொண்டிருக்கிறது. இதனால், விநா யகபுரம், காட்டுவலவு, கஸ்தூரி கோம்பை, பாப்பம்பட்டி, கோம்பை காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அத்தியாவசிய தேவைகள், பள்ளி கல்லூரி செல் லும் மாணவர்கள் மற்றும் மருத்துவ மனைக்கு செல்ல, 8 கிலோமீட்டர் வரை சுற்றிசெல்லும் நிலை ஏற் பட்டுள்ளது.  எனவே, தொப்பை யாறு ஆற்றின் குறுக்கே, விநாயக புரம், வெள்ளார், பாப்பம்பட்டி ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என,  அப்பகுதிமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.  இதனிடையே, கம்மம்பட்டி ஊராட்சி சேவியூர் கொட்டாய் பகு தியில், 60 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு கம்மம்பட்டி ஊராட்சி  வழியாக சாலை வசதி இல்லாத தால், சேலம் மாவட்டம் மேச்சேரி  அருகே உள்ள கருங்கல்பாளை யம் வழியை பயன்படுத்தி வருகின் றனர். அவர்கள் செல்லும் வழியில், தொப்பையாறு செல்கிறது. இதில்  2,000 கனஅடி தண்ணீர் செல்வதால்,  அவற்றை கடக்க அபாயகரமான முறையில், ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி கடந்து செல்கின்றனர்.  அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகே னக்கல் அருவிகளில் குளிப்ப தற்கும், பரிசல் பயணம் மேற்கொள் வதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு  தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை வித்துள்ளது.  காவிரி ஆற்றில் கடந்த 10 நாட் களுக்குப் பிறகு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலை யில், படிப்படியாக மீண்டும் அதிக ரித்து டிச. 4 ஆம் தேதி காலை 9  மணி நிலவரப்படி வினாடிக்கு 43  ஆயிரம் கன அடியாக உயர்ந்துள் ளது. இதனால், ஒகேனக்கல்  அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து நீர்வ ரத்து அதிகரித்துள்ளதால் சுற்று லாப் பயணிகள் அருவிகளில் குளிக் கவும், பரிசல் பயணம் மேற்கொள் ளவும் மாவட்ட நிர்வாகம் தடை  விதித்துள்ளது. மேலும் தொடர்ந்து  மழை பெய்து வருவதால் நீர்வரத்து  மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள தாக மத்திய நீர்வள ஆணைய அலு வலர்கள் தெரிவிக்கின்றனர்.