நாமக்கல், டிச. 4- சர்வதேச மாற்றுத்திற னாளிகள் தின விழா நாமக் கல் மாவட்டம் முழுவதும் எழுச்சியோடு நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத் ்தின் சார்பில், உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு ,மோகனூர் தாலுகா ஆண்டாபுரம், தோளூர், புதுப்பாளையம், வாழவந்தி மோகனூர், குன்னி பாளையம், பாலப்பட்டி, அரூர், பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர், குன்னமலை, சமத்துவபுரம் ஆகிய இடங்களில் புதனன்று கொடியேற்று விழா சங்கப் பெயர் பலகை திறப்பு விழா மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சங்க மாவட்ட அமைப்பாளர் எம். ஆர்.முருகேசன், மோகனூர் தாலுகா குழு தலைவர் எஸ்.மாதேஸ்வரன், செயலாளர் சி. பெருமாள், சுப்ரமணி மற்றும் சங்க நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர் . பரமத்தி வேலூர் தாலுகாவில் நடை பெற்ற கொடியேற்று விழாவில் தாலுகா குழு தலைவர் ஏ.நாகேஸ்வரி, தாலுகா குழு செயலாளர் டி.குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முருகேசன் உள் ளிட்ட சங்க நிர்வாகிகள் மாற்றுத்திறனா ளிகள் மற்றும் பாதுகாவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.