திருப்பூர், டிச.4- திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் வரி விதிப்பை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து வியாபா ரிகள் மற்றும் தொழில் அமைப் புகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் குப்பை வரை உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் ஆறு சதவீத சொத்து வரி உயர்த்தப்படும் என அறிவித்துள் ளதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அனைத்து கட்சியினர் அறி வித்திருந்தனர். இந்நிலையில், அனைத்து வியாபாரிகள் சங்க கூட்ட மைப்பு மற்றும் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் அவசர ஆலோ சனைக் கூட்டம் புதனன்று திருப்பூரில் நடைபெற்றது. இதில், வியாபாரிகள் மற்றும் தொழில் அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் அனைத்து வியாபா ரிகள் சங்கப் பேரவை தலைவர் துரைசாமி கூறுகையில், திருப்பூர் மாநகராட்சியின் அதிகப்படியான வரி விதிப்பால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் 25 சதவீ தம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25 சத வீதம் பேர் தொழிலையே விட்டுவிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால், இனி வரும் காலங்களில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கும் 50 சதவீத தொழிலும் நின்று போகும். விரைவில் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரி கள் இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும், நடவடிக்கை எடுக் காத பட்சத்தில் ஒரு வார காலத்தில் அனைத்து தரப்பு வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஆலோ சனை நடத்தி மிகப்பெரிய போராட் டத்தை திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்த போவதாக தெரிவித்தார்.