states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் வாழும் 18,000 இந்தியர்களை வெளியேற்ற டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பாஜகவிற்கு நெருக்கமான கோடி மீடியா ஊடகங்களோ அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் மக்களை வெளியேற்ற டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன.

கொடுமை மற்றும் வன்முறைகளில் இருந்து பெண்கள் பாதுகாக்கப்படுவது போல், சட்டத்தின் கீழ் ஆண்களும் அதே பாதுகாப்புகளைப் பெற உரிமை முழு உண்டு. அதாவது ஆண்களுக்கும் பாதுகாப்பாக வாழ முழு உரிமை உண்டு.

மாநில தலைநகரங்களில் கருத்துக் கேட்பு நடத்த முடியாத நிலையில், வக்பு மசோதா குறித்து அவசர அவசரமாக திருத்தங்களை வழங்க ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது. அதுமட்டுமல்லாது திருத்தங்கள் கேட்கப்படும் என்ற அறிவிப்பையும் இறுதி நிலையில் மாற்றியது நாடாளுமன்ற கூட்டுக்குழு. நடைமுறைக்கு மாறாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் உள்ளன.

எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் கடந்த காலங்களில் பல நாடாளுமன்ற கூட்டுக்குழுக்களில் அங்கம் வகித்துள்ளோம். நாடாளுமன்ற கூட்டுக்குழு விதிகள், செயல்முறைகள் எங்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் 10 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட இதுபோன்ற நாடாளுமன்ற கூட்டுக்குழுவை நாங்கள் பார்த்ததே இல்லை.

தில்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங் கள், ரயில்கள் வருகையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் வரும் 29ஆம் தேதி  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

“சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது பாக்கியம். மேலும் இந்த கௌரவத்திற்காக நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், பல ஆண்டுகளாக விருதுகளைப் பெறுவதை எனது தனிப்பட்ட காரணங்களுக்காக தவிர்த்து வருகிறேன். 

இந்தக் கலைக்கு உயிர் கொடுத்த பல தகுதியான நடிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்த விரு துக்கு என்னை விட அதிக தகுதியானவர்களில் ஒருவர் இந்த விருதைப் பெற்றால் நான் மிகவும் மகிழ்ச்சி யடைவேன்” என கர்நாடக அரசு வழங்கிய விருதை நடிகர் சுதீப் புறக்கணித்தப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறினார்.

“பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பெற்றுள்ள வளர்ச்சி இணையற்றது. இதனால் மக்களின் விருப்பங்கள் அதிகரித்துள்ளன” என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.