games

img

சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் உலகளவில் விமர்சனத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம்

கிரிக்கெட் உலகக்கோப்பை வருகிறதென்றால் இறுதிப்  போட்டியை விட ஒரே  ஒரு போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அது இரண்டு நாடு களுக்கு இடையேயான போட்டியாக இருந்தாலும் உலகளவில் அந்த போட்டிக்கு தனி மவுசு உள்ளது. அந்த போட்டி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தான். இருநாட்டின் எல்லைப் பிரச்ச னையைப் போலவே இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிக்கும் கிரிக்கெட் உலகில் தனி கிராக்கி உள்ளது.  இத்தகைய சூழலில் “மினி  உலகக்கோப்பை” என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல்  மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்திய அணியின் ஆட்டங்கள் மட்டும்) நடை பெற உள்ளது. அனைத்து போட்டி களும் பாகிஸ்தானில் தான் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி பாது காப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்தது. அதன் காரணமாகவே இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் என  சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) அறிவித்தது. “புரளி” இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சி யில் பாகிஸ்தான் பெயர் அச்சிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மறுப்பு தெரிவித்ததாக தக வல் ஒன்று வெளியானது. சாம்பியன்ஸ் டிராபிக்கான அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் எந்த நாடு போட்டியை நடத்துகிறதோ அந்த நாட்டின் பெயரோடு லோகோவும் இணைத்து அச்சிடப்படும். தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ் தான் நடத்துவதால் அந்த அணியின் பெயர் போட்டியில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் ஜெர்சியிலும் இடம்பெறும். இதற்கு எதிர்ப்பு தெரி வித்தும், இந்திய அணியின் ஜெர்சி யில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாகவும், பாகிஸ்தான் பெயர் இல்லாமல் ஜெர்சி அடிக்கும்படி வலி யுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளி யாகின.  வறுத்தெடுத்த உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி ஏற்கெனவே பாகிஸ்தான் செல்ல மறுத்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், இந்த தகவல் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய விளை யாட்டு அமைச்சகத்தின் சதியாக இருக்கும் என உலக நாடுகளின் விளை யாட்டு ஊடகங்களில் முக்கிய செய்தி யாக வட்டம் அடித்தன. மேலும் உலக நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்கள், “உலகின் பணக்கார கிரிக்கெட் வாரிய மாக இருந்து கொண்டு சில்லறை பிரச்சனைகளை கிளப்பி வருகிறது” என்ற கருத்துக்கள் மூலம் வறுத் தெடுத்தனர். இதனால் கிரிக்கெட் விளை யாடும் நாடுகளில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சர்ச்சை பொருளாக விமர்சிக்கப்பட்டது.  பாகிஸ்தான் கண்டனம்  தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், “பிசிசிஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது. இது  விளையாட்டுக்கு நல்லதல்ல. இந்திய அணியினர் ஏற்கெனவே பாகிஸ்தா னுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்ட னர். சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவிற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை அனுப்ப விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் ஜெர்சி யில் பாகிஸ்தான் பெயரை அச்சிட விரும்பாதது சரியானது அல்ல’’ என கண்டனம் தெரிவித்தது. பிசிசிஐ விளக்கம்  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ மவுனம் கலைத் துள்ளது. இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் அச்சிட மறுப்பு தெரிவிக்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபியின்  போது ஐசிசி நிர்ணயித்த ஆடைக் குறி யீட்டை இந்திய கிரிக்கெட் அணி கடைப் பிடிக்கும். சாம்பியன்ஸ் டிராபி லோகோ  மற்றும் ஆடைக் குறியீடு தொடர்பாக மற்ற அணிகள் என்ன செய்கிறதோ, அதையே நாங்களும் பின்பற்றுவோம். இது தொடர்பாக ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் பரவும் ஊகங் களை யாரும் நம்ப வேண்டாம்’’ என்று  தெரிவித்தார். பிசிசிஐ மறுப்பு தெரிவித்தாலும் சாம்பியன்ஸ் டிராபி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் காரணமாக உலக ளவில் வறுத்தெடுக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தை ரசிகர்கள் வறுத் தெடுத்து இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.