கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி அளித்த அல் ஹிலால்
சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் நடுக் கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், திங்களன்று நள்ளிரவு நடைபெற்ற 5ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் இன்டர் மிலன் (இத்தாலி), ப்ளுமி னென்ஸ் (பிரேசில்) அணிகள் மோதின. ப்ளுமினென்ஸை விட இன்டர் மிலன் வலுவான அடித்தளம் கொண்ட அணி என்ற நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் ப்ளுமினென்ஸ் 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி யது. ஐரோப்பிய முன்னாள் சாம்பிய னான இன்டர் மிலன் அணி தொடரை விட்டு வெளியேறியது. செவ்வாய்கிழ மை அன்று அதிகாலை நடைபெற்ற 6ஆவது நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) - ஆசியாவின் தலைசிறந்த கிளப் அணிகளில் ஒன்றான அல் ஹிலால் (சவூதி அரேபியா) அணிகள் பலப் பரீட்சை நடத்தின. அல் ஹிலாலை விட மான்செஸ்டர் சிட்டி பலம் வாய்ந்த அணி யாகும். ஆனாலும் இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் அபார வெற்றி பெற்று காலி றுதிக்கு தகுதி பெற்றது.
ஜூலை 5ஆம் தேதி காலிறுதி
நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை அன்று காலை நிறைவு பெற்று விடும். அதன்பின்பு ஜூலை 5ஆம் தேதி (சனிக்கிழமை - இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு) காலிறுதி ஆட்டங்கள் தொடங்கு கின்றன. அதுவரை வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு விடுமுறை ஆகும்.
டிஎன்பிஎல் பிளே ஆப் சுற்று திண்டுக்கல் - திருச்சி இன்று பலப்பரீட்சை
9ஆவது சீசன் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை அன்று நடைபெறவுள்ள 2ஆவது பிளே ஆப் சுற்று ஆட்டத்தில் திண்டுக் கல் - திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
திண்டுக்கல் - திருச்சி நேரம் : இரவு 7:15 மணி இடம் : என்.பி.ஆர் மைதானம், நத்தம், திண்டுக்கல் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஓடிடி)
விம்பிள்டன் டென்னிஸ் : பெகுலா அதிர்ச்சி தோல்வி
143 ஆண்டுகால பாரம் பரியமிக்க டென்னிஸ் தொடரான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் 138ஆவது சீசன் (கிராண்ட்ஸ்லாம் ஆன பின்பு) ஜூன் 30 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொடங்கியது. புல் தரை யில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் மற்றும் அதிகளவில் பரிசுத்தொகை கொண்ட தொடரான இந்த விம்பிள்டன் ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறு கிறது. இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செவ்வாயன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரி சையில் இல்லாத இத்தாலியின் எலிசா பெட்டாவை எதிர்கொண்டார். பெகுலா அதிரடிக்கு பெயர் பெற்றவர் என்ற நிலையில், அவரை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலியின் எலிசா பெட்டா எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்று, 2ஆவது சுற்றுக்கு முன்னேறினார். பவுல் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா வின் டாமி பவுல் 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத பிரிட்டனின் ஜோஹன்னஸை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.