games

img

விளையாட்டு

கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 மான்செஸ்டர் சிட்டி அபாரம்

சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.  தற்போது இந்த தொடர் நடுக்கட்ட த்தை  தாண்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற “குரூப் ஜி” பிரிவு லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) - ஜுவன்டஸ் (இத்தாலி) அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் கோல டிக்கும் முனைப்பில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தன. ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் சிட்டி 5-2 என்ற கோல் கணக்கில் ஜுவன்டஸை புரட்டியெடுத்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. புள்ளிகளின் அடிப்படையில் ஜுவன்டஸ் அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. “குரூப் ஜி” பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் வைடாட் (மொரோக்கோ) - அல் அய்ன் (ஐக்கிய அரபு அமீரகம்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அல் அய்ன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. எனினும் போதுமான புள்ளிகள் இல்லாததால் வைடாட், அல் அய்ன் அணிகள் கிளப் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறின.

அல் ஹிலால் அபாரம்

“குரூப் எச்” பிரிவு லீக் ஆட்டத்தில் சவூதி கிளப் அணியான அல் ஹிலால் அணி, மெக்சிகோ கிளப் அணியான பச்சுகாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. பச்சுகா தொடரில் இருந்து வெளியேறியது. “குரூப் எச்” பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் சால்ஸ்பர்க் (ஆஸ்தி ரியா) - ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கால்பந்து உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. சால்ஸ்பர்க் அணி கிளப் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

பிரேசில் மிரட்டல்

கிளப் உலகக்கோப்பை தொடரில் பிரேசில் சார்பாக மொத்தம் 4 அணிகள் பங்கேற்றன. 4 அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டங்களும்... நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகளும்...

கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஒரு முக்கியமான கிளைமேக்ஸ் உள்ளது. எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்கிறது என்பதை விட, எந்த கண்டத்தின் அணி சாம்பியன் பட்டம் வெல்லப்போகிறது என்பது தான் மிக முக்கியமான விஷயமாக உள்ளது.  இதற்கு காரணம் ஐரோப்பா - தென் அமெரிக்க கண்டங்களின் வரலாற்று ரீதியிலான விளையாட்டு மோதல் போக்கு தான். கால்பந்து உலகில் தலை சிறந்த வீரர்களை கொண்டது ஐரோப்பா - தென் அமெரிக்கா ஆகிய 2 கண்டங்கள் தான். அதனால் நாடுகளுக்கு இடையேயான உலகக்கோப்பை மட்டுமின்றி, கிளப் உலகக்கோப்பையிலும் ஐரோப்பா - தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடையே கடுமையான மோதல் போக்கு இருக்கும்.  இத்தகைய சூழலில் 21ஆவது சீசன் கிளப் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று முடிவில், எந்த கண்டத்தில் இருந்து அதிகளவிலான அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னறியுள்ளன என்பதை பார்க்கலாம் :

தென் அமெரிக்கா

1. பால்மீராஸ் (பிரேசில்) 2. போட்டாபோகோ (பிரேசில்) 3. பிளமிங்கோ (பிரேசில்) 4. ப்ளுமினென்ஸ் (பிரேசில்)

ஐரோப்பா

1. பென்பிகா (போர்ச்சுக்கல்) 2. செல்சி (இங்கிலாந்து) 3. பிஎஸ்ஜி (பிரான்ஸ்) 4. பேயர்ன் மூனிச் (ஜெர்மனி) 5. இன்டர் மிலன் (இத்தாலி) 6. டார்ட்மண்ட் (ஜெர்மனி) 7. மான்செஸ்டர் சிட்டி     (இங்கிலாந்து) 8. ஜுவன்டஸ் (இத்தாலி) 9. ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)

வட அமெரிக்கா 1. இன்டர் மியாமி (அமெரிக்கா) 2. மோன்டெர்ரி (மெக்சிகோ)

ஆசியா 1. அல் ஹிலால்  (சவூதி அரேபியா)

ஐரோப்பா கண்டத்தில் இருந்து தான் அதிகளவிலான அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.