புதுதில்லி, ஜன. 24 - வக்பு திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பாலுக்கு எதிராக அமளி யில் ஈடுபட்டதாகக் கூறி, திமுக எம்.பி. ஆ.ராசா, மஜ்லிஸ் கட்சித் தலைவர் ஒவைசி உள்பட 10 எதிர்க்கட்சி எம்.பி. க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வக்பு சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய பாஜக அரசு அறிமுகம் செய்தது. இது வக்பு சொத்துக்களைச் சூறையாடுவதற்கான சதித் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னணியில், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ. ராசா உள்பட 21 மக்களவை உறுப்பினர் களும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை உறுப்பினர் களும் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை யன்றும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தில்லி சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன்பாக, அரசியல் காரணங் களுக்காக பாஜக, வக்பு திருத்த மசோதாவை விரைவாக செயல்படுத்து வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். இதனால், நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டம் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த இடைவேளைக்கு பின்னர் மிர்வாஸ் தலைமையிலான குழுவினர் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஆஜராகினர். அப்போது, கூட்டத்தில் இருந்து வேகமாக வெளிநடப்பு செய்த திரிணாமுல் எம்.பி. கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி, நசீர் ஹுசைன் ஆகி யோர் ஜெகதாம்பிகா குழுவின் நட வடிக்கைகள் கேலிக்கூத்தாக உள்ளதென கடுமையாக விமர்சித்தனர். மறுபுறத்தில் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள், முன்மொழியப்பட்ட திருத்தங்களை உட்பிரிவு வாரியாக ஆய்வு செய் வதற்கான கூட்டத்தை ஜனவரி 27-க்குப் பதிலாக ஜனவரி 30 அல்லது 31-ஆம் தேதிக்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கூட்டுக்குழு கூட்டத்தில், தொடர்ந்து அமளியில் ஈடு பட்டு வருவதாகக் குற்றம் சாட்டி, ஆ. ராசா உள்பட 10 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க் களை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பாஜகவின் நிஷிகந்த் துபே கொண்டுவந்தார். பின்பு அது குழுவினரால் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, கூட்டுக் குழுவி லிருந்து, ஆ. ராசா, கல்யாண் பானர்ஜி, முகமது ஜவைத், அசாதுதீன் ஓவைசி, நாசிர் உசேன், மொஹிபுல்லா, எம். அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதிமுல் ஹக், இம்ரான் மசூத் ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.