ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - காயம் காரணமாக ஜோகோவிச் விலகல்
113 ஆண்டுகால பழமையான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடர் தற்போது இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், வெள்ளிக்கிழமை அன்று நடை பெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவரேவ், தரவரிசையில் 7ஆவது இடத்தில் முன்னணி நட்சத்திரமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே அதிரடி சர்வீஸ் மூலம் மிரட்டிய ஜுவரேவ் முதல் செட்டை 7-6 (7-5) என்ற கணக்கில் கைப் பற்றினார். முதல் செட் முடிந்தவுடன் ஜோகோவிச் காயம் காரணமாக வெளி யேற, ஜுவரேவ் அதிர்ஷ்ட வாய்ப்புடன் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொட ரில் முதன்முறையாக இறுதிக்கு முன் னேறினார். 10 முறை ஆஸ்திரேலிய ஓபன்சாம்பியனான ஜோகோவிச் வெறுங்கையோடு வெளியேறினார். ஜோகோவிச் நடிக்கவில்லை ஜுவரேவ் தாக்குதலை சமாளிக்க முடியாததால் முதல் செட்டை இழந்த கையோடு ஜோகோவிச் காயம் என சாக்குப் போக்குக் கூறி போட்டியை விட்டு நழுவியதாக தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஆனால் உண்மையில் ஜோகோவிச் காயம் என சாக்குப் போக்குக் கூறி நடிக்கவில்லை. அரை யிறுதி போட்டியில் இடது தொடை பகு தியில் கட்டுடன் தான் அவர் விளை யாடினார். அவரால் சரியாக ஓட முடியவில்லை. இது தொலைக்காட்சி யில் தெளிவாக தெரிந்தது. ஜோகோ விச் காயம் காரணமாக வெளியேறியது உண்மை தான். அவர் மீது முன்வைக்கப் படும் குற்றச்சாட்டுகள் போலியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ஒற்றையர் பிரிவு கோப்பை யாருக்கு? இன்று மேடிசன் கீஸ் (அமெரிக்கா) - சபலென்கா (பெலாரஸ்) மோதல்
டென்னிஸிலும் நகை கலாச்சாரம்
அதிகமாக ஓடக்கூடிய மற்றும் துள்ளிக் குதிக்கும் விளை யாட்டுப் பிரிவுகளில் ஒன்றான டென்னி ஸில் வீராங்கனைகள் நகை, பாசி உள்ளிட்டவைகளை அதிகளவில் அணிய மாட்டார்கள் (களத்தில் மட்டும்). ஓடும் மற்றும் துள்ளிக் குதிக்கும் போது அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்ப தால் டென்னிஸ் வீராங்கனைகள் நகை கலைச்சாரத்தை மைதானத்தில் பின் பற்றுவதில்லை. ஆனால் தற்போது இந்திய பெண்மணிகளைப் போலவே டென்னிஸிலும் நகை கலாச்சாரம் முளைத்துள்ளது. இந்திய பெண்மணி கள் திருமணம் மற்றும் திருவிழா காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தங்க நகைகளை அணிவது வழக்கம். அதே போல டென்னிஸ் வீராங்கனைகளும் தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட தங்க நகைகளை களத்தில் அணிந்து விளை யாட தொடங்கிவிட்டனர். இந்திய பெண்மணிகளை போல கீஸ் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் இறுதிக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் கழுத்தில் 3க்கும் மேற்பட்ட நகைகளை யும், மூக்குத்தியும் அணிந்து இந்திய பெண்மணி போல காட்சி அளித்தார். இவரைப் போலவே இறுதிக்கு முன்னேறிய பெலாரஸ் வீராங்கனை சபலென்காவும் தங்க நகைகள், பாசி 4க்கும் மேற்பட்ட அணிகலன்களை அணிந்து இருந்தார். அசவுகரியத்தை மறந்து மாடலுக்கு திரும்பியுள்ள டென்னிஸ் வீராங்கனைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரு கின்றனர்.