games

img

விளையாட்டு

கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 இறுதியில் பிஎஸ்ஜி

சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும், கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி  ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி - பிரான்ஸ்) அணிகள் மோதின.  இரு அணிகளும் சரிசம அளவில் பலம் வாய்ந்த அணிகள் என்ற நிலையில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிஎஸ்ஜி அணி முதல் 24 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 கோல்கள் (ரூய்ஸ் 6’ , 24’ - டெம்ப்லே 9’) அடித்து அமர்க்களப்படுத்தியது.  80ஆவது நிமிடம் வரை ரியல் மாட்ரிட் பதிலுக்கு கோலடிக்க பல்வேறு முயற்சி மேற்கொண்டது. ஆனால் பிஎஸ்ஜி அணியின் தடுப்பு அரணை முறியடித்து ரியல் மாட்ரிட் வீரர்களால் கோலடிக்க முடியவில்லை. குறிப்பாக 87ஆவது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணி யின் ரமோஸ் கோலடிக்க, ஆட்டநேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அபார வெற்றி பெற்று, முதன் முறையாக இறுதிக்கு முன்னேறியது.  5 முறை சாம்பியனான  ரியல் மாட்ரிட் அணி கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது. கால்பந்து உலகின் முன்னணி வீரரான பிரான்ஸ் நாட்டின் மாப்பே  ரியல் மாட்ரிட் அணியில் விளையாடிய போதி லும், அந்த அணி வெளியேறியுள்ளது கால்பந்து உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறன்று இறுதி ஆட்டம்

இந்திய நேரப்படி ஞாயிறன்று (ஜூலை 13) நள்ளிரவு கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.  இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி (பிரான்ஸ்) - செல்சி (இங்கிலாந்து) அணிகள் மோதுகின்றன. பிஎஸ்ஜி (பிரான்ஸ்) - செல்சி (இங்கிலாந்து) நேரம் : நள்ளிரவு 12:30 மணி (ஞாயிறு) இடம் : மெட்லைப் மைதானம், நியூயார்க் (அமெரிக்கா) சேனல் : டாஸ்ன் நெட்வொர்க் (இந்தியாவில் ஒடிடி-யில் மட்டுமே தெரியும்)

இங்கிலாந்து மண்ணில் ரன் மழை ஏன்?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 2 டெஸ்ட் போட்டி நிறைவு பெற்றது. இங்கிலாந்து மண்ணில் இதுவரை இல்லாத வகையில், 2 டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் ரன்மழை பொழிந்துள்ளன. இரண்டு பெரிய அணிகள் ஆடுகிறதே, பிட்ச் அப்படி உள்ளதா? இல்லை, பேட்டர்கள் திறமையாக ஆடுகின்றனரா? இல்லை, பந்துவீச்சாளர்கள் சொதப்பலாக இருக்கின்றனரா? என கிரிக்கெட் உலகில் பல்வேறு சந்தேகம் கிளம்பியுள்ளது. ஆனால், ஒரே ஒரு உண்மை விஷயத்தால் தான், இந்தியா - இங்கிலாந்து அணிகள் 2 போட்டிகளிலும் நல்ல நிலையில் ரன் குவித்துள்ளன. அது யாதெனில் இரு அணி வீரர்களும் வியூகம், துல்லியம் இல்லாமல் பந்துவீசியுள்ளனர். அதாவது பெயரளவிற்கு ஸ்விங் பந்துகளை வீசியுள்ளனர். பேட்டர்களின் சாதாரண சொதப்பல்களால் தான் அவை விக்கெட்டுகளாக மாறியுள்ளன. அதனால் இதனை பெரிதாக யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.