tamilnadu

காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் 900 ஆண்டுகள் பழமையான புத்தர் சிலை கண்டெடுப்பு

காஞ்சிபுரம், ஜன.24 - காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ளது தேவரியம்பாக்கம் கிராமம். இங்குள்ள பெருமாள் கோவிலில் வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய் குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது அழகிய வெண்மை நிற பளிங்கு கல்லால் ஆன புத்தர் சிலையை கண்டெடுத்தனர். சுமார் ஒரு அடி உயரம் கொண்ட அமர்ந்த நிலையில் உள்ள இந்த சிலையில் புத்தரின் கண்கள் மூடி  தியான நிலையில் உள்ளது. இந்த புத்தர் சிலை சுமார் 900 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்கு மார் கூறுகை யில், “இந்த புத்தர் சிலை பெருமை க்குரியது.  இந்த சிலை 900 ஆண்டு கள் பழமை வாய்ந்த து. காலம் கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், உதவி கல்வெட்டு ஆய்வாளர்கள் நாகராஜன் மற்றும் பிரசன்னா ஆகியோர் உறுதி செய்தனர் என்று தெரிவித்தார்.