tamilnadu

செர்பியா: சிவில் ஒத்துழையாமை இயக்கமும் ஜனநாயகக் கோரிக்கைகளும்

செர்பியா: சிவில் ஒத்துழையாமை இயக்கமும் ஜனநாயகக் கோரிக்கைகளும்

ஐரோப்பாவின் செர்பியா நாட்டில் ஜூன் 28-ல் நடைபெற்ற பெரும் திரள் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு சிவில் ஒத்துழையாமை இயக்கம் பரவி வருகிறது. பெல்கிரேடு மாநகரில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் இயக்கம் தலைமை தாங்கியது. மக்களின் கோரிக்கைகள் : உடனடித் தேர்தல்: நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஜனநாயக நிறுவனங்களின் மீட்டமைப்பு: சமூக, அரசியல் நெருக்கடியைப் போக்க ஜனநாயக நிறுவனங்களை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்.  பொருளாதார நீதி: பரவி வரும் வறுமை, பொருளாதார அசமத்துவம், பறிக்கப்படும் தொழிலாளர் உரிமைகளுக்கு அவசரமாகத் தீர்வு காண வேண்டும்.  மாணவர் இயக்கத்தின் பங்கு  : கடந்த 9 மாதங்களாக மாணவர் குழுக்கள் அமைதியாகப் பேரணிகளை நடத்தி வருகின்றன. டஜன் கணக்கான மாணவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் செய்ய முன்வருமாறு அறைகூவல் விடுத்துள்ளன.  பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு  : பன்னாட்டு நிறுவனமான ரியோ டிண்டோவிற்கு லித்தியம் சுரங்கம் தாரை வார்க்கப்பட்டது, பிரதான கட்டுமானப் பணிகள் அந்நிய மூலதனத்திடம் ஒப்படைக்கப்படுவது ஆகியவற்றை செர்பியாவின் சோசலிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.  இந்த நிலைமைகள் செர்பியாவில் மக்களின் இறையாண்மை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன.