மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது!
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை ஜூலை 13- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா!’ எனும் தலைப் பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகி களைச் சந்தித்து, கலந்துரையாடி தொகுதி நிலவரங் கள் குறித்து கேட்டறிந்து வருகிறார். குறிப்பாக, அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சிக்கு ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிந்து வருகிறார். கலை ஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற வற்றை மக்களிடம் விளக்குமாறும், பெரி யார், அண்ணா, கலைஞர் வழிகாட்டிய பாதையில் செயல்பட வேண் டும் என்றும் வலி யுறுத்தினார். “கடந்த ஜூன் 1 மதுரையில் அறி விக்கப்பட்டப்படி திமுக நிர்வாகிகள், முதல்வரை நேரடியாக சந்தித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வரு கின்றனர். அத்துடன், ஜூலை 1 முதல் தொடங்கப்பட்ட ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு திட்டத்தில், பயிற்சி பெற்ற திமுக இளம் நிர்வாகிகள் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறார்கள். இது வரை 77 லட்சத்து 34 ஆயிரத்து 937 உறுப்பினர்களைச் சேர்த்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு, “மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆன தல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வ மான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்” என திமுக நிர்வாகிகளை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.