tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாடு குமரியில் 150 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைப்பு

நாகர்கோவில், ஜன.24 - மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 வரை  நடைபெறும் சிபிஎம் அகில இந்திய  24 ஆவது மாநாட்டுக்கான கன்னியா குமரி மாவட்ட வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் வெள்ளியன்று நாகர் கோவிலில் நடைபெற்றது. இதில் 150  பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பி னர் ஆர்.லீமாறோஸ் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் க.கனகராஜ், மூத்த தோழர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் பேசினர்.  மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மூத்த தோழர்கள் என்.முருகேசன், கே.மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தலைவராக முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், செயலாளராக ஆர்.செல்லசுவாமி, பொருளாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன் உட்பட 150 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. மாநாட்டு நிதி ரூ.1 லட்சம் வரவேற்பு குழு கூட்டத்தில் அகில  இந்திய மாநாட்டு நிதியாக, மூன்றாவது  தவணையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஏற்கனவே ரூ.2  லட்சத்து 18 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.