tamilnadu

img

கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பால் சரக்குகள் ஏற்றுமதி ஸ்தம்பிப்பு

கப்பல் கட்டணங்கள் அதிகரிப்பால் சரக்குகள் ஏற்றுமதி ஸ்தம்பிப்பு

இந்தியாவிலிருந்து சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுவது ஸ்தம் பித்திருக்கும் நிலையில், கப்பல் கட்டணத்தைக்  குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்க ளவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் வலியுறுத்தினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொட ரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று  வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை யன்று மாலை மக்களவையில் சரக்குகள் சட்டமுன்வடிவின் மீது நடைபெற்ற விவா தத்தில் கலந்துகொண்டு ஆர். சச்சிதா னந்தம் எம்.பி. பேசியதாவது: இந்தியாவிலிருந்து சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுவது ஸ்தம்பித்திருக்கின்றன. காரணம், சரக்கு ஏற்றுமதி இறக்குமதி செய் யும் கப்பல்கள் ஏற்றுமதிக் கட்டணத்தை ஆறு மடங்கு உயர்த்தி இருக்கின்றன.

இதன் விளைவாக சணல், கடல் உணவு, உணவுப் பதப்படுத்தல் போன்ற பல்வேறு வர்த்தகங்கள் சீர்குலைந்திருக்கின்றன. இந்தப் பொருள்கள் அனைத்தும் இருப்பில் இருந்து வருகின்றன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளார்கள். 6 மடங்கு கட்டண உயர்வு இவ்வாறு விலைவாசி உயர்வுக்குக் காரணம் கொள்கலன்களின் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது.

இறக்கு மதி செலவுகள் அதிகரிப்பதால் பொம்மை கள் முதல் கணினிகள் வரையிலான பொருட்களின் விலைகள் அதிகரித்திருக் கின்றன. நெருக்கடியைச் சமாளிக்க ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை என்று ஏற்றுமதியாளர்கள் கூறுகிறார்கள்.  கோவிட்-19க்கு முன்பு, ரூ. 2 லட்சத்திற்கு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு கொள்கலனின் விலை இப்போது ரூ. 12 லட்சம் வரை உள்ளது. கொச்சியிலிருந்து சீனாவின் ஷாங்காய்க்கான கட்டணம் 1,200 அமெரிக்க டாலர்களிலிருந்து 1,500  அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது, தற்போது 5,000 அமெரிக்க டாலர்களிலி ருந்து 6,000 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. கொச்சி-துபாய் கொள்கலன் கட்டணம் 300 அமெரிக்க டாலர்களிலிருந்து 350  அமெரிக்க டாலர்கள் வரை இருந்தது, தற்போது 1,000 அமெரிக்க டாலர்களாக  அதிகரித்துள்ளது. கொச்சி-கொழும்பு கட்ட ணம் 1,500 அமெரிக்க டாலர்களிலிருந்து 2,000 அமெரிக்க டாலர்களாக அதிகரித் துள்ளது. கோவிட் ஊரடங்கு காரணமாக, கொள்  கலன்களின் பற்றாக்குறை காரணமாக  கப்பல் கொள்கலன்கள் துறைமுகங்களில் சிக்கித் தவிக்கின்றன.

சீனாவிலிருந்து இறக்குமதி குறைக்கப்பட்டதால் கொள்  கலன்களின் பற்றாக்குறை அதிகரித்துள்ள தாக கேரள ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரி வித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி குறைந்து வருவதால், கப்பல் நிறுவனங்கள் கொச்  சிக்கு கொள்கலன்களை வழங்க தயங்கு கின்றன. அதிக லாபத்திற்காக மற்ற துறை முகங்களுக்கு வழங்க விரும்புகிறார்கள். எனவே, கப்பல் கட்டணங்களைக் கட்டுப்  படுத்த சரக்கு ஏற்றிச் செல்லும் சட்டமுன் வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு ஆர்.சச்சிதானந்தம் பேசினார்.