தியாகி இடுவாய் இரத்தினசாமி நினைவு தினம்’
தியாகி இடுவாய் இரத்தினசாமியின் 23ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இடுவாய் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரத்தினசாமி நினைவு ஊர்வலம் நடத்தப்பட்டது. அதன் நிறைவாக ரத்தினசாமி நினைவிடத்தில் மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தென் சென்னை மாவட்டச் செயலாளர் அ.பாக்கியம், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.