மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டையொட்டி வியாழனன்று சென்னையில் ‘தொழில் முதலீடுகள் – தொழிலாளர் உரிமைகள்’ எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் பேசினார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், சமூகநீதி மற்றும் சமத்துவ மையத்தின் இயக்குநர் முனைவர் ஆர்.பவணந்தி வேம்புலு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.