மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, ஈரோடு, சத்தியமங்கலம், வடக்குப் பேட்டையில் வியாழனன்று கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் கே.மாரப்பன் வரவேற்றார். ‘மோடியின் இந்தியாவில் பழங்குடியினர் நிலை’ என்ற தலைப்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், ‘இடது பக்கம் செல்க - சாலை விதி மட்டுமல்ல - சமூக விதி’ என்ற தலைப்பில் தமுஎகச மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் கருத்துரையாற்றினர். மூத்த தலைவர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி, இடைக்கமிட்டி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமேதை காரல் மார்க்சின் நினைவு தினத்தையொட்டி (மார்ச் 14) சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கல்லூரி முதல்வர் சி.ஜோதிவெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ரா,பாரதி, மாவட்டச் செயலாளர் ச.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.