states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்

சென்னை, ஜன. 24 - பஞ்சாப் மாநிலத்தில் தமிழக கபடி வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  அதில், “பஞ்சாப் மாநி லத்தில் தமிழக கபடி வீராங்கனைகள் பாது காப்பாக உள்ளனர். இந்த வீராங்கனைகள் பத்திர மாகத் தமிழகத்துக்குத் திரும்ப ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை தில்லி யில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அதனைத் தொடர்ந்து, ஜனவரி 25 அன்று ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்படுவார்கள். கபடி அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை. அவரிடம் விசாரணை முடிந்து அனுப்பப்பட்டார்.  அனைவரும் பத்திர மாகத் தமிழகம் வர உள்ள னர்” எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஈரோடு கிழக்கு: கருத்துக்  கணிப்புக்குத் தடை!

சென்னை, ஜன. 24 -  ஈரோடு (கிழக்கு) சட்ட மன்றத் தொகுதியின் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப். 5 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள் ளார். மேலும், வாக்குப் பதி விற்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்பு களை அச்சு ஊடகம் அல் லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடக் கூடாது. வேறு முறைகளிலும் பரப்பக்கூடாது என்று கூறியுள் ளார்.

சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு

கொல்கத்தா, ஜன. 24 - ஆர்.ஜி. கர் மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை யில், பெண் முதுநிலை பயிற்சி மருத்துவரை பாலி யல் வன்கொலை செய்த வழக்கில், குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு, சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து, சீல்டா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அண் மையில் தீர்ப்பு வழங்கியது.  இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்தும், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கக் கோரி யும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி  இந்தியா வந்தார்

புதுதில்லி, ஜன. 24 - நாட்டின் 76-ஆவது  குடியரசு தினம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தா ண்டு சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ கலந்துகொள்ள உள்ளார். இதையொட்டி, வியாழக் கிழமை (ஜன. 23) இரவே, இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ இந்தியா வந்தார். அவ ருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளி யுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார் கரிட்டா விமான நிலையம் சென்று வரவேற்றார்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின்கணக்கீடு 

சென்னை, ஜன.24- கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கடந்த ஆண்டு 20 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு உச்சபட்ச மின் தேவை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு 22 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் தேவை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு மின்சார வாரியம் தயாராகவும் உள்ளது. வருகிற கோடை காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது . ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக விரைவில் புதிய டெண்டர் கோருவதற்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது. விரைவில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். மாதாந்திர மின் கட்டண முறை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு உறுதியாக நடைமுறைக்கு வரும்  என்று தெரிவித்தார்.

யுவின் செயலியில் செவிலியர்கள் பதிவிட தேவையில்லை கிராம செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜன. 24 – யுவின் செயலியில் கிராம செவிலியர்கள் பதிவிடத் தேவையில்லை என்று தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் கே.டி.எஸ். செல்வ விநாயகத்துடன் வியாழனன்று (ஜன.23) சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.பி.புனிதா, பொதுச்செயலாளர் ஏ.பிரகலதா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பிரகலதா, யுவின் போர்ட்டலில் ஆன்லைன் பதிவு பணியை செய்ய கட்டாயப்படுத்தக் கூடாது. 40 விழுக்காடு காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.திட்ட செயலாக்கம் குறித்து தற்போது பணியில் உள்ளவர்களுடன், சங்கத்துடன் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தினோம். இதை ஏற்றுக் கொண்ட இயக்குநர், யுவின் பணிகளை டேட்டா ஆப்பரேட்டர் மூலம் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளார். எனவே, செவிலியர்கள் யுவின் செயலியில் இனி பதிவேற்றம் தேவையில்லை என்றார்.

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக ரூ.500 கோடி மோசடியில் பாஜக நிர்வாகி கைது

வேலூர்,ஜன.24- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயா பானு. இவர் சேலம் அம்மாபேட்டை அருகே திருமண மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளார். இங்கு, ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தால், மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் 7 மாதங்களுக்கு பிறகு ரூ.1 லட்சம் திரும்ப வழங்கப்படும் என்று விஜயபானு விளம்பரம் செய்துள்ளார். இதை அறிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரிடம் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இப்படி ரூ.500 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணப் பரிவர்த்தனை தொடர்பான எந்த ஆவணங்களும் அங்கு முறையாக பயன் படுத்தப்படவில்லை என்று சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத் துள்ளது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அங்கு திடீர்  ஆய்வு செய்தனர்.  அப்போது அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் காவலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கு இருந்த ரூ.12 கோடி பணம்,  2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியவற்றை போலீசார்  பறிமுதல் செய்தனர். மேலும், அறக்கட்டளை உரிமையாளர் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோடி வழக்குகள் இருப்பது விசாரணை யில் தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து, விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  இதில் விஜயா பானு பாஜக கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் இயக்க வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்பார் தோழர் எல்.ஜி. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி புகழஞ்சலி

சென்னை, ஜன. 24 - ஆசிரியர் இயக்க வரலாற்றில் என்றென்றும் தோழர் எல்.ஜி. நிலைத்து நிற்பார் என்று தமிழ்நாடு  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஆசிரியர் இயக்கத்தின் அரும்பெரும் தலைவர்களில் ஒருவரான, எல்.ஜி என அழைக்கப்பட்ட எல்.கோபாலகிருஷ்ணன் 102வது வயதில் காலமானார். தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் பிதாமகன் மாஸ்டர் இராமுண்ணி, 1946ல் ‘சென்னை ராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம்’ என்னும் அமைப்பை உருவாக்கிய போது அதில் இணைந்து பணியாற்றியவர் எல்.ஜி. மாஸ்டர் இராமுண்ணி மறைவுக்குப் பின்பு, ‘சென்னை ராஜதானி ஆரம்ப ஆசிரியர் சம்மேளனம்’ என்னும் பெயரைத் தாங்கிய ‘தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’ உருவானது. அந்த மாபெரும் இயக்கத்தின் உருவாக்கத்திற்கு காரணமான தளபதிகளில் ஒருவராகவும் தோழர் எல்.ஜி. திகழ்ந்தார். ஆசிரியர்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக பலமுறை சிறையில் அடைக்கப் பட்டவர். ஏராளமான பழிவாங்கலை எதிர்கொண்டவர். ஆசிரியர் இயக்க வரலாற்றின் பக்கங்களில் அவர் நிரந்தரமாக வாழ்வார். பல்வேறு வரலாற்றுக்குச் சொந்தக்காரர் தோழர் எல்.ஜி பயணித்த அதே திசை வழியில் பயணிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.