states

img

செம்மயமாக காட்சி தரும் விழுப்புரம்; மக்கள் போராளிகளை வரவேற்கத் தயார்! - சி.ஸ்ரீராமுலு

டிசம்பர் 1 அன்று புதுவை-மரக்காணம் இடையே கரையைக் கடந்த பெஞ்சால் புயல், வட மாவட்டம் முழுவதும் 30 மணி நேரத்துக்கும் மேல் கனமழையை கொட்டித் தீர்த்தது. வரலாறு முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு பெஞ்சால் புயலால் விழுப்புரம் மாவட்டம்  மயிலத்தில் 51 செ.மீ மழை பதிவானது. மாவட்டம் முழுமைக்கும் 64 செ.மீ மழை கொட்டியது விழுப்புரம் வரலாற்றில் முதல் முறையாகும். தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாத்தனூர் அணையின் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. வெள்ளத்தின் கோரத் தாண்டவம் - சாத்தனூர் அணையின் உபரி நீர் வெளியேற்றம் - காட்டாற்று வெள்ளம் கரையின் இருபுறமும் ஆர்ப்பரித்தது - ஆற்றின் போக்கு மாறி வயல்வெளி, குடியிருப்புகளை மூழ்கடித்தது - தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிப்பு - 175க்கும் மேற்பட்ட ஏரிகள் உடைப்பு - ஒரு லட்சம் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின விவசாயத்தின் பேரழிவு செஞ்சி முதல் கண்டாச்சிபுரம் வரை பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மறைந்தன. 10-15 அடி உயரத்திற்கு மணல் படிந்தது. விவசாய பயிர்கள், கிணறுகள், மின் மோட்டார்கள், பம்பு செட்டுகள் அனைத்தும் மண்ணோடு மண்ணாயின. அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் மணிகளும், கரும்பு உள்ளிட்ட பயிர்களும் முற்றிலும் அழிந்தன. விழுப்புரம் மாவட்டத்தின் பெரும்பகுதி கிராம மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிய தென்பெண்ணை ஆற்று கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கட்டமைப்புகள் சீர்குலைந்தன. செஞ்சி பேரூராட்சி பகுதியில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் வழங்கல் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பொருளாதார இழப்பு ஒவ்வொரு குடும்பமும் லட்சக்கணக்கில் இழப்பை சந்தித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் மக்கள் மீள முடியாமல் தவிக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் நிவாரணப் பணிகள் செங்கொடி தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு அரசு, நிவாரண உதவித் தொகை வழங்க வலியுறுத்தி பல்வேறு இயக்கங்களை  நடத்தி வருகின்றனர். மாநாட்டுக்கான மக்கள் ஆதரவு இத்தகைய நிலையில் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டிற்கான பணிகள் துவங்கின. மக்களின் உற்ற தோழர்களின் கட்சி இது என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அதனால்தான், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் , கடந்த 20 நாட்களாக மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள செங்கொடி தோழர்களுக்கு மக்கள் தாராளமாக நிதி வழங்கி ஆதரவளித்து வருகின்றனர்.

விரிவான பிரச்சார இயக்கம்
அந்த உற்சாகத்துடன்,
-    1.5 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று பிரச்சாரம் 
-    உழைக்கும் மக்களின் கருத்தரங்குகள்
- விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள்
-     கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வாகனப் பிரச்சாரம்
- தெருமுனைக் கூட்டங்கள்
என மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மாநாடே காட்சியாக மாறியுள்ளது.
கலை நிகழ்ச்சிகளின் தாக்கம்
“சமூக ஒடுக்குமுறை தகரட்டும், சமத்துவ தமிழகம் ஒளிரட்டும்!” என்ற முழக்கத்துடன் புதுச்சேரி சப்தர் ஹஷ்மி, கல்லை குறிஞ்சி, சேலம் மாங்குயில் கலைக் குழுக்கள் களமிறங்கின. 12 இடைக்கமிட்டிகள் மூலம் தினமும் 10 மையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்திய கலைப் பிரச்சாரம் மக்கள் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நகரின் விழாக்கோலம்
-    திருச்சி-சென்னை நெடுஞ்சாலைகள் முதல் கிராமங்கள் வரை சுவரொட்டிகள்
- வண்ணமயமான செங்கொடி மாநாட்டு விளம்பரங்கள்
-     பல வண்ண டிஜிட்டல் விளம்பர பதாகைகள்
- 1000க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் உருவப் படங்கள்
பேரணியும்-பொதுக்கூட்டமும்
ஜனவரி 3 மாலை 4 மணிக்கு செம்படை வீரர்களின் மாபெரும் அணி வகுப்புடன் ஆனந்தா திருமண மண்டபம் சிக்னல் அருகிலிருந்து விழுப்புரம் நகராட்சி திடல் வரை பேரணி. வழிநெடுகிலும் செங்கொடிகள் படர்ந்து விரிந்து பட்டொளி வீசுகின்றன.
வரவேற்புக் குழுவின் பணிகள்
மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், வரவேற்புக் குழுத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், ஆகியோரின் வழிகாட்டுதலில்  பல்வேறு அரங்க அமைப்புகளின் தோழர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.
மாநாட்டு அரங்க ஏற்பாடுகள்
-     கமலா நகர் ஆனந்தா திருமண மஹாலில் பிரதிநிதிகள் மாநாடு
-    அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அரங்கம்
-     மாபெரும் தலைவர் என்.சங்கரய்யா பொதுக்கூட்ட திடல்
-     தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் நுழைவு வாயில்
என தலைவர்களை நெஞ்சில் ஏந்துகிறது விழுப்புரம்.
நான்கு திசைகளிலிருந்தும் வரும் தலைவர்கள், பிரதிநிதிகள், பார்வையாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் வரவேற்க விழுப்புரம் நகரம் தயாராகி நிற்கிறது. விழுப்புரம் மாநகரமே செம்மயமாக காட்சியளிக்கிறது.
சாதி வெறி, தீண்டாமை கொடுமைகள் அடிக்கடி நிகழும் இம்மாவட்டத்தில், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, விழுப்புரம் மக்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் முக்கிய நிகழ்வாக அமையும்.