states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜக அமைச்சரே நாங்கள் ஒன்றும் குட்டி பாகிஸ்தான் அல்ல. கேரளா படித்த மதச்சார்பற்ற, தீண்டாமைகளை கட்டுப்படுத்தியுள்ள மற்றும் ஆரோக்கியமான மாநிலம் என்பதை பெருமையுடன் சொல்கிறேன். எங்கள் தனிநபர் வருமானம் தேசிய வருமானத்தை விட 60 சதவீதம் அதிகம். இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்றி பாகிஸ்தானை போல பிரதிபலிக்க வைக்க விரும்புவது நீங்கள் தான்.

தேசிய ஊரக வளர்ச்சி வேலைத் திட்டத்தில் மக்கள் இணைவதை கடினமாக்குவதற்காக இந்த அரசு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் அந்தத்  திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் ஊதியத்தை பணவீக்கத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது அது உண்மையான பாதிப்பைக் காட்டியிருக்கும்.

பைரேன் சிங் மன்னிப்பு கேட்டால் போதாது, பதவி விலக வேண்டும். அவரது மன்னிப்பு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்ததை ஒப்புக்கொள்ளும் செயல். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது.

பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை? பிரதமர் மணிப்பூருக்குச் சென்று  பைரேன் சிங் சொன்னதை ஏன் சொல்ல முடியாது? அவர்  உலகம் முழுவதும் சென்றுள்ளார்.ஆனால் மணிப்பூருக்கு  செல்வதை அவர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார். 

டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1.77 லட்சம் கோடி  ரூபாய் வசூல் ஆகியுள்ளதாக ஒன்றிய அரசின்  தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தொகை யானது நவம்பர் மாதம் வசூல் செய்யப்பட்டதை விட 7.3 சதவீதம் அதிகமாகும்.

மத்தியப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 28 வயதான வியாபாரி சுரேந்திர பார்வல் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் அவரது விருப்பத்தின்படி தானம் செய்யப்பட்டது. சிறப்பு விமானத்தில் அவரது உடல் உறுப்புகள் மும்பை கொண்டு செல்லப்பட்டு உறுப்பு தேவைப்படும் நபர்களுக்கு பொருத்தப்பட்டன. 

ஆன்லைன் மோசடிகளை தடுப்பதற்காக செயல்பாட்டில் இல்லாத வங்கிக்கணக்கு கள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட  ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2 ஆண்டு களுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.

சிபிஐ அமைப்பின் ஆய்வாளர் ரகுல் ராஜ்  சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த 2023  இல் சிறப்பு புலனாய்வு பிரிவில் பதக்கம் பெற்றார்.  இந்நிலையில், மலாய் செவிலியர் கல்லூரியின் உரிமையாளரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை லஞ்சமாக பெற்றபோது அவர் பிடிபட்டார். இத னைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப் பட்டு அவருக்கு வழங்கப்பட்ட பதக்கமும் திரும்பப்  பெறப்பட்டுள்ளது. பதக்கத்தை ரத்து செய்யுயக் கோரும் சிபிஐ இயக்குநர் பிரவீன் சூத் பரிந்துரை யினை உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண் டுள்ளது.