மணிப்பூர் மற்றும் ஒடிசா ஆளு நர்கள் வெள்ளிக்கிழமை அன்று பதவியேற்றனர். அசாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா மணிப்பூரின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளு நராக முன்னாள் ஒன்றிய உள்துறைச் செயலாளரும் அமித் ஷாவிற்கு மிக நெருக்கமானவருமான அஜய் பல்லா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணிப்பூரின் 19ஆவது ஆளுநராக அஜய் பல்லா பதவியேற்றுக் கொண்டார். அஜய் குமார் பல்லாவுக்கு மணிப்பூர் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி டி.கிருஷ்ண குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர் பைரேன் சிங் மற்றும் மாநில அமைச் சர்கள் பங்கேற்றனர்.