மணிப்பூர் பாஜக அரசாங்கத்தின் முதல்வர் பைரேன் சிங் மன்னிப்பு கேட்க தகுதியற்றவர் என அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசின் பெரும்பான்மைவாத / பிரிவினைவாத அரசியலால் 2023 மே மாதம் இனக்கல வரம் வெடித்தது. இந்த இனக்கலவரத்தால் 200 க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய் யப்பட்டனர். சுமார் 60 ஆயிரத்துக்கும் அதி கமான மக்கள் வீடுகளையும், விவசாய நிலங்களையும் இழந்து அகதிகள் முகா மில் அடைக்கலம் புகுந்துள்ளனர். 60 ஆயி ரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டும் பாஜக அரசால் அம்மாநி லத்தில் அமைதியை நிலைநாட்ட முடிய வில்லை. இத்தகைய கொடூரத்திற்குப் பிறகும் பைரேன் சிங் எப்படி முதல்வராக நீடிக்கி றார்? அவர் பதவி விலக வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் டிசம்பர் 31 அன்று மணிப்பூ ரில் நடந்து வரும் வன்முறைகளுக்கு மக்க ளிடம் முதல்வர் பைரேன் சிங் மன்னிப்புக் கேட்கும் நாடகத்தை அரங்கேற்றினார்.இரண்டு சமூக மக்களும் ஒருவரை ஒரு வர் மன்னித்து கடந்தகால தவறுகளை மறந்து புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என பேசினார். இந்நிலையில் பைரேன் சிங் மன்னிப்பு கேட்பதற்கே தகுதியற்றவர் என ராஜஸ் தான் மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார்.