states

ஸ்ரீமதி மரணம் - வன்முறை வழக்கில் தாயாரையே குற்றவாளி ஆக்குவதா?

சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு சிபிஎம் கண்டனம்!

சென்னை, பிப். 11 - கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மர ணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைக்கு, மாணவியின் தாயாரையே முதல் குற்றவாளியாக்கும் சிபிசிஐடி-யின்  குற்றப்பத்திகைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி ஒன்றில், 2022-ஆம் ஆண்டு ஜூலை  13 அன்று, மாணவி ஸ்ரீமதி மர்மமான முறை யில் மரணமடைந்தார். 

சிபிசிஐடி குற்றப்பத்திரிகை மிகவும் கண்டிக்கத்தக்கது

இந்த வழக்கில் பல்வேறு முரணான தகவல்கள் வெளிப்பட்ட நிலையில், பள்ளி நிர்வாகத்தையும் வழக்கில் உள்ளடக்கி முறை யாக விசாரிக்க வலியுறுத்தி அனைத்து தரப்பினரும் போராடினர். மாணவியின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி  சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மென மாணவியின் தாயார் செல்வி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்த அதே தேதியில் ஜூலை 17 அன்று நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த  வன்முறையை அனைத்து தரப்பாருமே கண்டித்தனர். இதனைத் தொடர்ந்து விசார ணையின் போது சென்னை உயர் நீதி மன்றமே இவ்வழக்கை சிபிசிஐடி விசார ணைக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த வன்முறை தொடர்பாக விசாரித்த சிபிசிஐடி போலீசாரின் குற்றப்பத்திரிகையில் 916 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகவும், அதில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்க தாகும். 

நீதிகேட்டுப் போராடும் குடும்பத்தை மிரட்டும் செயல்

ஜூலை 13 அன்று மகளை இழந்து நீதிக்காக போராடி வந்த ஒருவர் 4 நாட்கள் இடைவெளியில் இவ்வளவு பெரிய வன்முறையை உருவாக்கினார் என்று சொல்வது நம்பத்தகுந்ததல்ல. மாணவி மரணத்திற்கு நியாயம் கேட்கும் வழக்கில் குடும்பத்தினர் உறுதியாக உள்ள நிலையில் இவ்வாறு குற்றம் சாட்டுவதும் ஒருவகையான மிரட்டலாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். தனியார் பள்ளி நிர்வாகத்தினர் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்ட சமயத்தில், எந்த விசாரணையும் இல்லாமலேயே பள்ளி நிர்வாகத்திற்கு நற்சான்று கொடுத்து விடுதலை செய்தது நீதிமன்றம். அப்போதும் காவல்துறை அந்த பிணை உத்தரவை கேள்வி எழுப்பவில்லை. இப்போது கலவரம் தொடர்பான வழக்கில், தவறு செய்தவர்களோடு நியாயம் கேட்டு போராடியவர்களையும் குற்றவாளியாக சேர்த்திருக்கிறார்கள். ஆட்சியர், கண்காணிப்பாளரையும் விசாரணைக்கு உட்படுத்துக! மேலும், “ஜூலை 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் பெருந்திரளாக மக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களை பார்த்திருந்த காவல்துறைக்கு ஜூலை 17 அன்று நடந்த போராட்டம் குறித்த எந்த தகவலும் தெரியாதது ஆச்சரியம்தான். தெரியாதா அல்லது உளவுத்துறைக்கு தெரிந்தும் இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, விசாரணையை நான்கு நாட்கள் தாமதப்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தோம். இந்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

யாரையோ காப்பாற்றுவதற்கு பாதிக்கப்பட்டோர் மீதே பழியா?

மாணவியின் மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதனை எதிர்த்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டுமென்று மாணவியின் தாயார் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார். தாயா ரின் இந்த போராட்டத்தை முடமாக்க வேண்டு மென்றும், யாரையோ காப்பாற்றுவதற்காக வன்முறைச் சம்பவம் நடந்த இடத்தில் இல்லாத ஸ்ரீமதியின் தாயார் மற்றும் அப்பாவி மக்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடுத்துள்ளது இவ்வழக்கை முடமாக்கும் நோக்கத்தோடு செய்யப்பட்டதாகும். இந்தப் போக்கு வழக்கு விசாரணையை முற்றாக திசைத்திருப்பி, தவறு செய்தவர்கள் தப்பிக்கவே வழிவகுக்கும். அதுமட்டுமின்றி  சிபிசிஐடி போலீசார் வன்முறை நடந்த இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள், அவ்வழியாக சென்றவர்கள், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அப்பாவி பொதுமக்கள் மீதும், அப்பகுதியில் வாழும் ஏராளமான பொதுமக்கள் மீதும் வழக்குத் தொடுத்தனர். சுமார் 60-70 பேர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவையெல்லாம் மோசமான அராஜக நடவடிக்கையாகும்.

மாணவி மரண வழக்கை  சிதைக்கும் முயற்சி

மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும் செய்த தவறுகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. சிபி சிஐடி காவல்துறையினரின் நடத்தைகள், பள்ளி நிர்வாகத்தின் தரப்பையும், மாவட்ட நிர்வாகத்தையும் காப்பாற்றி மாணவியின் மரண வழக்கை சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இந்த போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. எனவே, பாரபட்சமற்ற நீதியை உறுதி செய்ய பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசார ணைக் குழு அமைத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.