‘சமஸ்கிருத மொழிக்கு எதற்கு மொழிபெயர்ப்பு?’
நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற விவாத நேரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,”சமஸ்கிருதத்தில் மொழிபெயர் த்து மக்களின் வரிப்பணம் வீணடிக்கப் படுகிறது” என கண்டனம் தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசு கையில்,”மாநிலங்களின் அதிகாரப்பூர்வ மொழிகளுக்காக மொழிபெயர்ப்பு செய்து வழங்குவது வரவேற்கத்தக்க விசயம் தான். ஆனால் யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு மக்களின் வரிப் பணத்தை செலவிடுவது அவசியமா? இந்தியாவில் எந்த மாநிலம் சமஸ்கிரு தத்தை அதன் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளது? 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வெறும் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுவதாக கூறப்படுகிறது. பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதத்துக்காக மக்கள் வரிப் பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?. ஆர்எஸ்எஸின் சித்தாந்தங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடிக்க வேண்டும்?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
5 நாட்களில் ரூ.16.97 லட்சம் கோடி இழப்பு
கடந்த ஐந்து நாட்களில் மும்பை பங்குச் சந்தை குறியீடு சுமார் 2,290.21 புள்ளிகள் சரிந்து வர்த்த கமாகி வருகிறது. ஐந்தாவது நாளாக செவ் வாயன்று வர்த்தகத்தில் 30 பங்கு கொண்ட மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் சுமார் 1,018.20 புள்ளிகள் சரிந்து இரண்டு வார குறைந்த அளவான 76,293.60 என்ற புள்ளி களில் நிலைபெற்றது. தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் மற்றும் வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்க வரிகள் காரணமாக, கடந்த ஐந்து நாட்களாக இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் சுமார் ரூ.16.97 லட்சம் கோடி அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.
ரயில் பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு
கும்பமேளாவிற்காக ஒன்றிய மற்றும் உத்தரப்பிரதேச பாஜக அரசுகள் எந்த உதவியும், முன் னேற்பாடுகளும் செய்யவில்லை. இந்நிலையில், பீகார் மாநிலம் மது பானி ரயில் நிலையத்தில் அலகாபாத் (பிரயாக்ராஜ்) வழியாக புதுதில்லிக்கு செல்லும் சுவதந்திரதா சேனானி எக்ஸ் பிரஸ் (12561) ரயிலில் இடம்பிடிக்க பயணி கள் போட்டி போட்டுக்கொண்டு முண்டிய டித்தனர். ரயிலில் இடம் கிடைக்காத விரக்தியில் பயணிகள் சிலர், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.
லாட்டரி நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு வரி செலுத்த தேவை இல்லை உச்சநீதிமன்றம் உத்தரவு
பியூச்சர் கேமிங் நிறுவனம் நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட மாநி லங்களில் லாட்டரி தொழிலில் ஈடு பட்டு வருகிறது. இந்நிறுவனம் வரிவிதிப்பு தொடர்பாக சிக்கிம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மாநில அரசே வரிவிதிக்க முடியும் என சிக்கிம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், சிக்கிம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பியூச்சர் கேமிங் நிறுவனம் மேல்முறை யீடு செய்த வழக்கு செவ்வாயன்று விசா ரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்க ளுக்கு பிறகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு,”லாட்டரி நிறுவனங் கள் ஒன்றிய அரசுக்கு வரி செலுத்த தேவை இல்லை. மாநிலப் பட்டியலின் 62ஆவது பிரிவின் கீழ் லாட்டரி (பந்தயம்-சூதாட்டம்) உள்ளது. அதனால் மாநில அரசு மட்டுமே வரி விதிக்க முடியும். இதனால் மனு தாரரின் வழக்கு தள்ளுபடி செய்யப்படு கிறது” என வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மீனவர்கள் வேலைநிறுத்தம்
காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கிளிஞ்சல்மேடு மீனவர்களை விடுவிக்க வேண்டும், தர மான சிகிச்சை அளிக்க வேண்டும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.17 ஆம் தேதி வரை தொடர் போராட் டங்களில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
திருப்பூரில் வங்கதேசத்தினர் அதிகம்
திருப்பூர்: திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் ஜவுளித் தொழிலை நம்பி தமிழகத்துக்குள் ஊடுருவும் வங்க தேசத்தினர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜனவரியில் மட்டும் திருப்பூரில் முறைகேடாக தங்கியிருந்த 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்த கூலிக்கு வேலை செய்வதால் சில நிறுவனங்கள் இவர்களின் வருகையை ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. எல்லை தாண்டி வருவோரை கடத்தி விடுவதற்கென்றே ‘தலால்’ என்றழைக்கப்படும் ஏஜெண்டுகள் செயல்படு கின்றனர். வங்கதேசத்திலிருந்து வேலை தேடி வருபவர் களுக்கு ‘எம்ப்ளாய்மென்ட் விசா’ வழங்கி சட்டப்பூர்வமாக அனுமதிக்கலாம் என்றும், தொழில் நகரங்களில் வாரந்தோ றும் சோதனை நடத்தினால், ஊடுருவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாய்க்கடி: தமிழகம் 2 ஆவது இடம்
சென்னை: நாய்க்கடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2024இல் 4.79 லட்சம் நாய்க்கடி சம்பவங்களும், 40 உயிரி ழப்புகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் சுமார் 13 லட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் தெருநாய்கள் எண்ணிக்கை 4.5 லட்சம். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதுடன், அடை யாளக் குறியீடு செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
‘பிங்க் ஆட்டோ’: பயிற்சி
சென்னை: சென்னையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 250 பெண்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இதுவரை 114 பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி, சுய தற்காப்பு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை, ஜிபிஎஸ் பயன்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பெண்களுக் கான பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவி குடும்பத்திற்கு நிதியுதவி
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவி கவிபாலா (12), குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் மாணவி உயிரி ழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
ரயில் பயணம்: 131 பேர் பலி
சென்னை: திருச்சி - மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பயணத்தின் போது 131 பேர் உயிரிழந்து உள்ளனர். 418 திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 195 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 115 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். 254 பேர் தற்கொலை செய்துள்ளனர். 24 ரயில்வே காவல் நிலையங்களில் 115 பணியிடங்கள் காலி யாக உள்ளன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களில் தெரிய வந்துள்ளது.
ரூ.237.98 கோடி வருவாய்
சென்னை: தமிழ்நாட்டில் ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் முகூர்த்த நாளன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திங்களன்று ஒரே நாளில் பத்திரப்பதிவுத் துறை ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியு உள்ளது. தைப் பூசத்தையொட்டி செவ்வாயன்று பத்திரப் பதிவுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டன.
விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து களமாடி வருகிறார். இந்நிலை யில், அவரது வீட்டில், தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரை சந்தித்து 2 ஆவது நாளாக செவ்வாயன்றும் ஆலோ சனை நடத்தினார். அடுத்த மாதம் விஜய் சுற்றுப் பயணம் துவங்க உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
நாளை போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
சென்னை, பிப்.11 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண் டாம் கட்ட பேச்சுவார்த்தை பிப்.13, 14 ஆம் தேதிகளில் சென்னை குரோம்பேட்டை யில் நடைபெற உள்ளது. தமிழக அரசு போக்கு வரத்துக் கழகங்களில் 1.23 லட்சம் பேர் பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலா கியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் உள்ளது. முதல்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம் பேட்டையில் கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று நடை பெற்றது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடைபெறாமல், தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. மேலும், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட் டங்களை நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், போக்கு வரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை பிப்.13, 14 ஆம் தேதிகளில் சென்னை குரோம் பேட்டையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சங்கம் சார்பில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப் பட உள்ளனர். மேலும், பேச்சு வார்த்தையில் கலந்து கொள் ளும் பிரதிநிதி தங்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறு கிறது. விரைவில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஜா புயல் இழப்பீடு: பரிசீலிக்க அரசு தயார்
சென்னை, பிப்.11- கடந்த 2018 ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங் களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் 63 பேர் பலியாகினர். 732 கால்நடைகள் பலியாகின. 88,000 ஹெக்டேர் பரப்பு நெற்பயிர்கள் பாதிக்கப் பட்டன. இது மட்டுமில்லாமல், 56 ஆயிரம் குடிசை வீடுகள், 30 ஆயிரம் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதை யடுத்து தமிழக அரசு சார்பாக இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் கஜா புயலால் இடிந்த வீடுகள், பயிர் பாதிப்பு, கால்நடைகள் உயிரிழப்புக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி அமர்வில் செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2018 இல் கஜா புயலால் பாதிக்கப் பட்ட கிராமத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், ஒருவேளை இழப்பீடு கிடைத் திருக்காவிட்டால் அரசுக்கு விண்ணப்பித் தால் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து அரசுதான் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து அடிவாங்கும் இந்திய பங்குச் சந்தைகள்
ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!
மும்பை, பிப். 11 - வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் கடந்த 2 மாதமாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டு வருகின்றன. அந்த வகையில், வாரத்தின் முதல் நாளான திங்களன்று (பிப். 10) காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 539.15 புள்ளிகள் வரையும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி 166.25 புள்ளிகள் வரையும் சரிவைக் கண்டன. இந்நிலையில், வாரத்தின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை யன்றும், சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை 1,036.34 புள்ளிகள் சரிந்து 76,275.45 புள்ளிகளாக இருந்தது. இது மொத்த வணிகத்தில் 1.34 சதவிகிதம் சரிவாகும். சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில், ஒரு நிறுவனத்தின் பங்கு கூட ஏற்றத்திற்கு செல்லவில்லை. அனைத்து நிறுவனங்களின் பங்குகளுமே சரிவைக் கண்டன. இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும் 346.75 புள்ளிகள் சரிந்து 23,034.85 புள்ளிகளாக இருந்தது. இது மொத்த வணிகத்தில் 1.37 சதவிகித சரிவாகும்.
கர்ப்பிணியின் சிசு அகற்றம்!
கர்ப்பிணியின் சிசு அகற்றம்! சென்னை, பிப்.11- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிக்கு ரயிலில் பாலி யல் தொல்லை கொடுக்க முயன்றபோது அந்த பெண் கூச்சலிட்டார். அப்போது, சற்றும் எதிர் பாராத நிலையில், ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை தள்ளிவிட்டால் பலத்த காய மடைந்தார். அந்த பெண்ணு க்கு ஏற்பட்ட உடல்நலப் பிரச்ச னைகளால் உயர் சிகிச்சைக் காக வேலூர் அரசு மருத்துவ மனையில் இருந்து ராணிப் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருச் சிதைவு ஏற்பட்டதால் 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின் றது உறுதி செய்யப்பட்டது. பிறகு, வயிற்றில் இருந்த சிசு அகற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்ணின் கை, கால், மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டுள்ளதால் அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அதே சமயம் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது.
புதிய தாழ்தள மின்சார பேருந்துகளுக்கு டெண்டர்
சென்னை, பிப்.11 - சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 600 தாழ்தள மின்சார பேருந்துகள் கொள்முதல், பயன்பாடு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி, ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பதிவேற்றம் செய்ய துவங்கும் நாள் மார்ச் 10 பகல் 12 மணி. இறுதி நாள் ஏப்ரல் 3 பகல் 4 மணி. ஏப்ரல் 4 ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். முன் வைப்புத் தொகை ரூ.3 கோடி. ஒப்பந்தப் புள்ளி படிவங்களை https://tntenders.gov.in/, https://mtcbus.tn.gov.in/, https://tnidb.tn.gov.in என்ற இணையதள முகவரி யில் பார்வையிட்டுக் கொள்ளலாம். ஒப்பந்ததாரர்கள் தங்களது ஒப்பந்தப் புள்ளி படிவங்களை அரசு இணையதள முகவரியான https://tntenders.gov.in/nicgep/app இல் மட்டுமே பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
போலி போஸ்டர் வெளியிட்டு கலவரத்தைத் தூண்டிய பாஜக!
அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிக்கை
சென்னை, பிப். 11 - திருப்பரங்குன்றம் மலை விவ காரத்தில் இஸ்லாமிய அமைப்பினர் வெளியிட்டதாக சுவரொட்டி ஒன்றை தமிழக பாஜக பரப்பியது. அந்த சுவரொட்டி போலியானது என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையை வைத்து, பாஜக-வினர் மதக் கல வரத்தை ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முருகன் கோயில் அமைந்திருக்கும் திருப்பரங்குன்றம் மலையில், முஸ்லிம்கள் ஆடு, கோழிகளை பலி யிடுகிறார்கள், மலையையே அப கரிக்கப் பார்க்கிறார்கள் என்று பொய்யை பரப்பி வருகின்றனர். தமிழக பாஜக-வின் அதி காரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் இஸ்லா மிய அமைப்பினர் வெளியிட்டதாக போஸ்டர் ஒன்றும் பகிரப்பட்டது. அந்த போஸ்டரில், “மதுரை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை ஹஜரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளி வாசலில், மத வழிபாட்டு உரிமையை காக்க, சிக்கந்தர் மலையில் ஆடு, கோழி அறுத்து சமூக நல்லிணக்கத் திற்கான சமபந்தி விருந்து நடை பெறுகிறது. பிப்ரவரி 18 அன்று நடை பெறும் இந்த விருந்தில் மதுரை வாழ் அனைத்து மத சகோதரர்களும், இஸ்லாமிய சகோதரர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டு இருப்பதாக காட்டப்பட்டிருந்தது. ஆனால், இஸ்லாமிய அமைப்பினர் இது போன்ற போஸ்டர் எதையும் வெளியிடவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக வதந்தி பரப்புவதாகவும் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.