பாப்கானுக்கு கூட நாடெங்கும் ஒரே சீரான முறையில் ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாமல் திணறும் பாஜக அரசுதான், நாடெங்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என நாடகம் நடத்துகிறது.
விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு பட்ஜெட்டில் தெலுங்கானா அரசு ரூ.72,659 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகளுடன் தெலுங்கானா அரசு எப்பொழுது உடன் நிற்கும்.
லக்னோவில் (உத்தரப்பிரதேச தலைநகர்) முதல்வர் இல்லத்தின் கீழ் ஒரு சிவலிங்கம் உள்ளது. இது எங்களுக்குத் தெரியும். அதையும் தோண்டி எடுக்க வேண்டும். தோண்டுவது தானே பாஜக அரசின் வேலை.
அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒன்றிய அரசாங்கத்திடம் இந்தி திரையுலகத்தினர் மண்டியிட்டுக் கிடந்தனர். அதிகாரத்தை விமர்சிக்காத படங்களாக எடுத்தனர். பிரதமருடன் செல்பிகள் எடுத்தனர். மக்களுக்காக பேச வேண்டிய நேரத்திலும் பேசாமல் அவர்கள் அமைதி காத்தார்கள். விளைவாக இன்று படங்கள் எடுக்க முடியாமல் இந்தி சினிமாத்துறையே தடுமாறிக் கொண்டிருக்கிறது.