அமைதியான வழியில் போராடும் இளைஞர்களுக்கு எதிராக அடக்கு முறையைக் கையாளும் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி கண்டிப்பாக இருக்கும்.
உத்தவ் தாக்கரே வாகனங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். ஆனால், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ், மோடி, அமித் ஷா ஆகியோரின் ஹெலிகாப்டர்கள், கார்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏன் சோதனை செய்வதில்லை?
ஜார்க்கண்டில் பாஜகவின் இருப்பைக் காப்பாற்றவே அமலாக்கத்துறை சோதனை நடத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. வங்கதேச ஊடுருவல்காரர்களை தடுக்கும் நடவடிக்கைகளை பாஜக ஆளும் அசாமில் தான் முதலில் நடத்த வேண்டும்.
உத்தரப்பிரதேசத்தில் வேலை கேட்டு போராடிய மாண வர்கள் மீது தடியடி நடத்தப்படுகின்றன ; வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் ஜார்க்கண்டில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றிய தவறான கனவை காட்டுகின்றனர். தேர்தலுக்குப் பிறகு பாஜகவைச் சேர்ந்தவர்கள் கொரோனா காலத்தைப் போல காணாமல் போய் விடுவார்கள்.
அடுத்த மூன்று நாட் களுக்கு தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமாவின் சில பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.
மணிப்பூரில் பதற்றமான சூழல் நிலவி வருவ தால், பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப் பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற் படையில் இணைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.