states

பிப்.,8 வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை

சென்னை, பிப்., 02- பிப்ரவரி 8ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொது வாக லேசான பனிமூட்டம் காணப்படும். இதே நிலை பிப்ரவரி 8ஆம் தேதி வரை நீடிக்கும்.   சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப் படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 முதல் 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை வெயிலின் தாக்கம் இருக்கக்கூடும்” என அதில் கூறப்பட்டுள் ளது.