மகன் கைது: தந்தை தற்கொலை
மகன் கைது: தந்தை தற்கொலை கோவை, பிப்.2- கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்ததை கண்டித்து, தந்தை காவல் நிலையத்தில் தீக்குளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம், அன்னை இந்திரா நகர் பொதுக் கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்று காவல் துறையினர் சோதனை செய்த தில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மற்றும் மணி பரத் என்ற இரண்டு இளைஞர்கள் கையில் கஞ்சா வுடன் பிடிபட்டனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 107 கிராம் அளவு உள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீ சார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், தனது மகன் மணிபரத் மீது காவல் துறையினர் பொய்யாக கஞ்சா வழக்குப்பதிவு செய்ததாக கூறி, சனியன்று அவரது தந்தையான சேகர், கவுண்டம்பாளையம் காவல் நிலையம் முன்பு பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளித்தார். இதைய டுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து சேகரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலை யில், ஆட்டோ ஓட்டுநரான சேகர் ஞாயிறன்று சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.
சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
பல கோடி ரூபாய்க்கு பதிவு நடைபெறாமல் நஷ்டம்
சேலம், பிப்.2- தங்களின் உரிமைகள் பறிக்கப் படுவதாகக்கூறி, ஞாயிறன்று சார் பதி வாளர் அலுவலக ஊழியர்கள் ஞாயி றன்று பணி புறக்கணிப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழக பத்திரப்பதிவுத்துறை, 11 மண்டலங்களாக, 52 மாவட்ட பதிவா ளர் அலுவலகம் உடன் 578 சார் பதி வாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. இந்த அலுவலகங்களில் இன்றைய நிலவரப்படி 11 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமி ழக அரசுக்கு டாஸ்மாக்கை அடுத்து, பத்திரப்பதிவுத்துறையை அதிகள வில் வருமானத்தை பெற்றுக் கொடுத்து வருகிறது. ஆண்டுக்கு பல் லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட் டும் பத்திரப்பதிவுத்துறையில் பணி யாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து வஞ் சிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வந்த னர். மற்ற துறைகளைப் போல் பத்திரப் பதிவுத்துறைக்கும் விசேஷ தினங் கள், விடுமுறை நாட்கள் சனி, ஞாயி றுக்கிழமைகளில் பொது விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அரசு தனது வருவாயை பெருக்கிக் கொள்ளும் வகையில், விசேஷ தினங்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்து செயல் படுத்தி வருகிறது. இந்நிலையில், முகூர்த்த தின மான ஞாயிறன்று பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை பணியாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு சனியன்று அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால், கோரிக் கையை அரசு ஏற்க முன்வராதால், ஞாயிறன்று காலை முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் உட்பட பல் வேறு மாவட்டங்களில் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்கள் திறக்கப்பட வில்லை. இதனால் பல கோடி ரூபாய்க்கு பதிவு நடைபெறாமல் அர சுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது.
முதல் அரசு பேருந்து பெண் நடத்துநர்
உதகை, ஜன.2- நீலகிரி மாவட்டத்தில் முதல் அரசு பேருந்து பெண் நடத்துநராக பட்டதாரி பெண் பணி அமர்த்தப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா. பிகாம் வரை படித்துள்ளார். இவரது கண வர் கருப்பசாமி, அரசு பேருந்து நடத்துநராக இருந்தபோது மாரடைப்பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு சஷ்டிகா (4) யூகேஜி வகுப்பு படிக்கும் மகள் மற்றும் 2 வயது காருண்யா என்ற மகளும் உள்ளனர். கருணை அடிப்படையில் தனக்கு வேலை வழங்க சுகன்யா போக்குவரத்து துறையில் விண்ணப்பித்திருந்தார். அதோடு தனது குடும்ப கஷ்டத்தை விளக்கி தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். இதையடுத்து சுகன்யா விற்கு கருணை வேலை வழங்க போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு முதல்வர் பரிந்துரை செய்திருந்த நிலையில், சுகன்யாவிற்கு அரசு போக்குவரத்து கழகத்தில் பயிற்சிக்குப் பின் நடத்துநர் பணி வழங்கப்பட்டது. தொடர்ந்து கோத்தகிரி - குன்னூர் இடையே இயங்கும் அரசு பேருந்துவில் தனது முதல் பணியை துவங்கினார். இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தின் முதல் அரசு பேருந்து பெண் நடத்துநர் என்ற பெருமையை சுகன்யா பெற்றார்.
கல்லூரி மாணவி கடத்தல்: 6 பேர் கைது
நாமக்கல், பிப்.2- ராசிபுரம் அருகே கல் லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த சிங் களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாண வியை வெள்ளியன்று சிலர் காரில் கடத்திச் சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தருமபுரி மாவட்டம், பென் னாகரத்தில் பதுங்கியிருந்த 6 பேரையும் கைது செய்து, மாணவியையும் மீட்டனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், சிங்களாந்த புரத்தில் வசித்து வந்த தமிழ் பாண்டியன் (32) மாண வியை கடத்திச் சென்று கட் டாய தாலி கட்டி நண்பர்கள் உதவியுடன் பென்னாகரத் தில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தமிழ்பாண்டியன், அவ ரது நண்பர்களான 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்த லுக்குப் பயன்படுத்தி கார், இருசக்கர வாகனத்தை பறி முதல் செய்தனர்.
நாதக கட்சியை இடைத்தேர்தல் பணிகளிலிருந்து நீக்க வலியுறுத்தல்
ஈரோடு, பிப்.2- நாம் தமிழர் கட்சியினர் வன்முறையில் ஈடு படுவார்கள் என்பதால், அக்கட்சியை இடைத் தேர்தல் பணிகளில் இருந்து நீக்குவதற்கு தேர் தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தபெதிக பொதுச்செயலாளர் கு.ராம கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார். ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதி யில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆத ரவாக ஞாயிறன்று, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் இடைத்தேர்தல் பிரச்சார நோட் டீஸ் விநியோகம் செய்தனர். அப்போது அந்த நோட்டீஸில் சீமானை தவறாக சித்தரித்துள்ள தாக கூறி, நாம் தமிழர் கட்சியினர் தபெதிக- வினர் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட் டிணன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வேட்பாளரை ஆதரித்து, எங்கள் அமைப்பினர் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சா ரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த நாதகவினர் அராஜகமாக, எங்க ளது நிர்வாகிகளை தாக்கி, துண்டறிக் கையை பறித்து, கிழித்துள்ளனர். இது ஒரு திட்டமிட்டு செய்த செயல். மேலும், தேர்த லில் நாதகவினர் வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் விரக்தியில் சீமானும் பேசி வருவதோடு, அவரது கட்சியி னர் தேர்தலை அமைதியாக நடத்த விடுவார் களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எங்கள் நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சா ரம் நிறைவடைய உள்ளதால், நாம் தமிழர் கட் சியினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என் றும், இதனால் தேர்தல் ஆணையம் நாதகவி னர் மீது நடவடிக்கை எடுத்து அக்கட்சியை தேர்தல் பணிகளில் இருந்து நீக்க வேண்டும், என்றார்.