districts

img

தமுஎகச சார்பில், 257 ஆவது இலக்கிய சந்திப்பு

கோவை, பிப்.2- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற இலக்கிய சந் திப்பில் நூல் வெளியீடு மற்றும் நாவல் அறிமுகம் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கோவை மாவட்டக் குழு சார்பில், 257 ஆவது இலக்கிய சந் திப்பு நிகழ்வு கோவை தாமஸ் கிளப்பில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு, கவிஞர் செ.விவேகானந்தன் தலைமை வகித்தார். பாடல்கள், கவிய ரங்கதுடன் துவங்கிய நிகழ்வில், கவிஞர் நாகை ஆசைத்தம்பி வரவேற்றார். அடித் தட்டு மக்களின் உண்மையான நேசத் தைப் படம் பிடித்துக்காட்டும் விதமாக கவிதைகளை எழுதியுள்ள கவிஞர் முத் தையா மோகனின் கவிதை தொகுப் பான ‘விடியலை வெளுக்கும் கிழக்கு’ நூலை வெளியிட்டு தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் லட்சுமிகாந் தன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.கரீம் வாழ்த்திப் பேசி னார். முத்தையா மோகன் ஏற்புரையாற் றினார். கவிஞர் சுதா நடராஜனின் ‘காலத் தின் மொழி’ கவிதை தொகுப்பை வெளி யிட்டு தமுஎகச மாநிலக்குழு உறுப்பி னர் மு.ஆனந்தன் சிறப்புரையாற்றி னார். சுதா நடராஜன் ஏற்புரையாற்றி னார். விருதுநகர் மாவட்டம், அருக் கோட்டை வட்டாரத்தில் வாழும் எளிய மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதியை பேசும் எழுத்தாளர் சக்தி சூர்யாவின் ‘நர வேட்டை’ நாவலை அறிமுகம் செய்து  வழக்கறிஞர் வெண்மணி கருத்துரை வழங்கினார். சக்தி சூர்யா ஏற்புரையாற் றினார். முடிவில், ப.கருப்பசாமி நன்றி  கூறினார்.