தலையாரி முறையை ஒழிக்க வலியுறுத்தல்
உதகை, மே 1– தேயிலைத் தோட்டங்களில் நிலவும் தலையாரி முறை உடனடியாக ஒழிக்கப் பட வேண்டும் என கூடலூரில் நடை பெற்ற வாழ்வுரிமை தினக் கருத்தரங் கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூரில் மே தின நாளில் வியாழனன்று, மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஊழி யர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வாழ்வுரிமை தினக் கருத்தரங் கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவரும், பேராசிரியருமான முனை வர் சு.நரசிம்மன் தலைமை ஏற்றார். பொருளாளர் செந்தில் குமார் வர வேற்றார். ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் வே.பெருமாள் துவக்கி வைத் தார், இதில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் என்.சீனிவாசன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங் கத்தின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் சிறப்புரையாற் றினர். இதில், கூடலூர் பேருராட்சிக்குட் பட்ட அனைத்து தொழிலாளர்களுக் கும், மலைப்பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் நிலவும் தலையாரி முறை உடனடியாக ஒழிக்கப்பட வேண் டும். கூடலூர் சாலைகளை சீரமைக்க வேண்டும். கூடலூர் பேருந்து நிலை யத்தில் சுகாதார வசதி, இருசக்கர வாக னங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்ப டுத்த வேண்டும். கூடலூர் - கோயம்புத் தூர், தாளூர் - கோழிக்கோடு, சிரஞ்சூர் - கூடலூர் போன்ற தார்ச்சாலைகளில் தற் போது வசூலிக்கப்பட்டு வரும் சுங்கக் கட்டணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். கூடலூர் - உதகை சாலை யில் கோடக்கல் என்ற இடத்தில் அடிக் கடி நிகழும் சாலை விபத்துகளை தடுக் கும் வகையில், சாலை வளைவுகளில் உரிய தடிமன் அளவில் மஞ்சள் பெயிண்ட் கோடுகள் அமைத்து விபத் தில்லா சாலையாக மாற்றியமைக்க வேண்டும். கூடலூர் பகுதியில் (அரசு தலைமை மருத்துவமனை அருகில்) கடந்த மழைக்காலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக மண்ணில் புதையுண்டு வாழ்வாதாரம் இழந்த 9 ஆதரவற்ற குடும்பங்களுக்கும் உடனடி யாக மாற்று குடியிருப்பு வழங்க வேண் டும். கூடலூர் - பந்தலூர் வட்டங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கூடலூர் அரசு மருத்துவம னையை மாவட்ட தலைமை மருத்து வமனை தரத்திற்கு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில், செயலாளர் கணேச மூர்த்தி நன்றி கூறினார்.